Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2022 Road Safety World series.. கிரிக்கெட்டுக்கு திரும்பும் சச்சின்,ரெய்னா, யுவராஜ்.. எந்த சேனல்?

கான்பூர்: 2022ஆம் ஆண்டு சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கி வரும் அக்டோபர் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

சாலை பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் இந்த தொடர் முதல் முறையாக கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

பிறகு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, முதல் சீசன் பாதியில் நிறுத்தப்பட்டு, பிறகு 2021ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டது.

எத்தனை அணிகள்

எத்தனை அணிகள்

இந்த தொடரில் இந்திய அணி சார்பாக களமிறங்கிய சச்சின் டெண்டுல்கர், பேசிய ஊதியத்தை தரவில்லை என்று கூறி விலகினார். இந்த நிலையில், தற்போது, சச்சினுடன் பேசி அந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. தற்போது 2வது சீசன் மிகவும் பிரம்மாண்டமாக இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கிறது.

நட்சத்திர வீரர்கள்

நட்சத்திர வீரர்கள்

இதில் இந்திய அணியின் கேப்டனாக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற சின்ன தல ரெய்னா, இந்த தொடரில் விளையாடுகிறார். இதே போன்று அதிரடி வீரர் யுவராஜ் சிங், இர்பான் பதான், யூசுப் பதான்,ஹர்பஜன் சிங் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இம்முறை விளையாடுகின்றனர். இதே போன்று பிரைன் லாரா, ராஸ் டைலர், வாட்சன், இயன் பெல், தில்சான், ஜாண்டி ரூட்ஸ் ஆகியோர் களம் காண்கின்றனர்.

இந்தியா அட்டவணை

இந்தியா அட்டவணை

செப் 10 இரவு 7.30 மணிக்கு இந்தியா Vs தென்னாப்பிரிக்கா

செப் 14 இரவு 7.30 மணிக்கு இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ்

செப் 18 இரவு 7.30 மணிக்கு இந்தியா Vs நியூசிலாந்து

செப் 21 இரவு 7.30 மணிக்கு இந்தியா Vs வங்கதேசம்

செப் 24 இரவு 7.30 மணிக்கு இந்தியா Vs இங்கிலாந்து

அரையிறுதி செப் 28,29, இறுதிப் போட்டி அக். 1

இந்திய லெஜண்ட்ஸ் அணி விவரம்

இந்திய லெஜண்ட்ஸ் அணி விவரம்

சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், ரெய்னா, இர்பான் பதான், யூசுப் பதான், ஹர்பஜன் சிங், முனாஃப் பட்டேல், பத்ரிநாத், பின்னி, நமன் ஓஜா, மண்பிரித் கோனி, ஓஜா, வினய் குமார், அபிமன்யூ மித்துன், ராஜேஸ் பவார், ராகுல் சர்மா.

தொலைக்காட்சி - colours ciniplex, sports 18. டிஜிட்டல் - ஜியோ டிவி, Voot app

Story first published: Saturday, September 10, 2022, 20:32 [IST]
Other articles published on Sep 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+