Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI Test series - இந்தியாவுக்கு தலைவலி கொடுக்க கூடிய 3 வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்.. யார் இவர்கள்?

மும்பை : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய பிறகு பங்கேற்கும் முதல் டெஸ்ட் தொடர் என்றால் அது வெஸ்ட் இண்டீஸ் தான்.

வெஸ்ட் இண்டீஸ் பொதுவாக பலம் குன்றிய அணியாக கருதப்பட்டாலும் அவர்களை சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது சவாலான காரியம்.

கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி சொந்த மண்ணில் பலம் வாய்ந்த இங்கிலாந்தை டெஸ்ட் தொடரில் வீழ்த்தியது இங்கு கவனிக்க வேண்டியது. இதன் காரணமாகத்தான் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு 10 நாட்கள் முன்பே சென்று பயிற்சி பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தியாவுக்கு சவாலை கொடுக்கக்கூடிய மூன்று வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

3 West indies Player who can gives challenge for team india in test

இந்த பட்டியலில் முதலிடத்தில் பிடித்திருப்பவர் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிரைக் பிராத்வெயிட் இதுவரை 85 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 28 அரைசதம் 12 சதம் அடித்திருக்கிறார். இதில் ஒரு இரட்டை சதமாகும். வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் போட்டியில் ஒரு அளவுக்கு வெற்றி பெறுவது என்றால் அது பிராத்வெயிட்டின் பேட்டிங்கால் தான். சுழற் பந்துவீச்சு வேகப்பந்து வீச்சு என அனைத்தையும் எதிர்கொண்டு நங்கூரம் போல் களத்தில் நின்று ரன் சேர்ப்பதில் வல்லவர். இவர் இந்தியாவுக்கு தலைவலியை கொடுக்கலாம்.

இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் சந்தர்பாலின் மகன் தேஜ்நரைன் சந்திரபால். இவருடைய தந்தை எப்போதுமே இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடியிருக்கிறார். 25 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக விளையாடி ஏழு சதங்கள் அடித்திருக்கிறார். இந்த நிலை சந்தர்ப்பாலும் தந்தையைப் போலே திறமை வாய்ந்தவராக திகழ்கிறார்.6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இதுவரை ஒரு சதம், ஒரு இரட்டை சதம் அடித்திருக்கிறார்.

டெஸ்டில் தற்போது சராசரி 45 மேல் வைத்திருக்கும் தேஜ்நரைன் சந்திர பால் இந்தியா போன்ற பலம் வாய்ந்த அணிக்கு எதிராக தன்னுடைய திறமையை நிரூபிக்க காத்திருக்கிறார் வல்லவர். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் வேகப்பந்துவீச்சாளர் கீமர்ரோச் 78 டெஸ்டில் விளையாடிய கீமர் ரோச் இதுவரை இந்தியாவுக்கு எதிராக மூன்று போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். கடந்த முறை இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சென்றபோது கீமர் ரோச் ஹட்ரிக் சாதனையை நூலிலையில் தவறவிட்டார். கீமர்ரோச் வேகம் நிச்சயமாக இந்தியாவுக்கு சிக்கலை கொடுக்கும். இந்த மூன்று வீரர்களையும் சமாளித்தாலே இந்திய அணிக்கு வெற்றி கிடைக்கும்.

Story first published: Wednesday, July 5, 2023, 19:41 [IST]
Other articles published on Jul 5, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+