அந்த 6 நாள் கணக்கு.. ஐபிஎல் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு பின் சிஎஸ்கே மேட்சும் ஒரு காரணமா? - பின்னணி
சென்னை: 2021 ஐபிஎல் சீசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு பின் சிஎஸ்கே ஆடிய மேட்ச் ஒன்றும் காரணம் என்று தகவல்கள் வருகிறது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் பதிவாகும் தினசரி கொரோனா கேஸ்கள் 4 லட்சத்தை தாண்டி உள்ளது.
இதையடுத்து தற்போது ஐபிஎல் தொடர் மொத்தமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வீரர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கே
2021 ஐபிஎல் சீசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு பின் சிஎஸ்கே ஆடிய மேட்ச் ஒன்றும் முக்கிய காரணமாகும். சிஎஸ்கேவிற்கும் மும்பைக்கும் இடையில் நடந்த கடைசி போட்டியில் மும்பை கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து வென்றது. இந்த போட்டியில் சிஎஸ்கேவின் அணியின் பவுலிங் பயிற்சியாளராக எல் பாலாஜி இருந்தார்.

பாலாஜி கொரோனா
இந்த நிலையில் இந்த போட்டி முடிந்த 2 நாட்களில் பாலாஜிக்கு கொரோனா ஏற்பட்டது. இதனால் விதிப்படி சிஎஸ்கே அணியை மொத்தமாக 6 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். அதோடு சிஎஸ்கே அணியோடு ஆடிய மும்பை அணியை தனிமைப்படுத்த வேண்டும்.

கணக்கு
இரண்டு முக்கிய அணிகளை 6 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்பதால், இந்த அணிகள் இந்த வருடம் ஆட உள்ள மற்ற போட்டிகளும் தடைபடும். இதனால் அடுத்தடுத்த போட்டிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்படும். ஐபிஎல் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு பின்பு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

சிக்கல்
இது போக இன்று டெல்லி மற்றும் ஹைதராபாத் அணியில் வீரர்களுக்கு கொரோனா ஏற்பட்டது. பின்னர் கொல்கத்தா அணியிலும் வீரர்களுக்கு கொரோனா ஏற்பட்டது. இதனால் அணிகளின் போட்டிகளும் 6 நாட்கள் தடையாகும் என்பதாலும் மொத்தமாக இந்த சீசன் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications