அவரை ஐபிஎல்லில் ஒருத்தர் கூட சீண்ட மாட்டாங்க.. "ரெட் கார்ட்" பிளானில் 7 அணிகள்.. பெரிய பரபரப்பு!
சென்னை: ஐபிஎல் தொடரில் இந்த வருடம் ஆட போகும் வீரர் ஒருவரை எடுக்க கூடாது என்ற திட்டத்தில் 7 அணிகள் இருப்பதாக கூறப்படுகிறது.
2021 ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த முறை இந்தியாவிலேயே ஐபிஎல் தொடர் நடக்க உள்ளது.
இந்தியாவில் இந்த தொடர் நடக்க உள்ளதால் அதற்கு ஏற்றபடி வீரர்களை தேர்வு செய்ய ஒவ்வொரு அணியும் பிளான் போட்டு வருகிறது. இந்த முறை இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று கருதப்படுகிறது.

ஏன்
இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் எப்போதும் நன்றாக ஆடுவதால் இந்த முறை இவர்கள் அதிகம் எடுக்கப்படலாம். அதேபோல் ராஜஸ்தான் அணியும் கூட சஞ்சு சாம்சன் போன்ற இளம் வீரரை கேப்டனாக நியமித்து அசத்தி உள்ளது. இதனால் இந்த ஐபிஎல் தொடர் பல புதிய வீரர்களை கிரிக்கெட் உலகிற்கு அடையாளப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

அடையாளம்
இந்த ஐபிஎல் சீசன் ஏலத்தில் ஷாருக்கான், ஹரி நிஷாந்த், பாபா அபராஜித், மணிமாறன் சித்தார்த் போன்ற தமிழக வீரர்கள் பெரிய அளவில் கவனம் செலுத்த வாய்ப்பு உள்ளது. தமிழக வீரர்கள் இந்த தொடர் முழுக்க அதிகம் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று கருதப்படுகிறது.

நிலைமை எப்படி
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் இந்த வருடம் ஆட போகும் வீரர் ஒருவரை எடுக்க கூடாது என்ற திட்டத்தில் 7 அணிகள் இருப்பதாக கூறப்படுகிறது. முக்கியமான வீரர் ஒருவர் இந்த வருட ஏலத்திற்கு தனது பெயரை பதிவு செய்துள்ளார். இவர் ஐபிஎல் ஏலத்திற்கு பெயரை பதிவு செய்ததே பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது .

தகுதி
ஆனால் இவருக்கு ஐபிஎல்லில் ஆடும் அளவிற்கு தகுதி எல்லாம் இல்லை என்கிறார்கள். இப்போது இவர் களத்திற்கு வருவது தேவையில்லாத விஷயம். அவர் சும்மா இருப்பதே சிறந்தது என்று பல அணிகள் கருதுகிறது. இவரை குறி வைக்க கூடாது.. ரெட் கார்ட் கொடுக்கப்பட்ட ஹீரோ போல இவரை கண்டுகொள்ளாமல் இருந்துவிட வேண்டும் என்று பல அணிகள் யோசிக்கிறது .

எடுக்கும்
அதிகபட்சம் ஒரே ஒரு அணி இவரை ஐபிஎல் ஏலத்தில் குறி வைக்கும். அதுவும் கூட 2 கோடிக்கும் அதிகமாகவெல்லாம் இவரை எடுக்க வாய்ப்பே இல்லை என்று கூறுகிறார்கள். அவருக்கு திறமை இல்லை .. அவருக்காக அதிக தொகையை செலவு செய்ய முடியாது என்று பல அணிகள் கருதுகிறது.


Click it and Unblock the Notifications