For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரு தமிழக வீரர்.. அதுவும் ஆடியதே சில மேட்ச்கள்.. ஏலம் எடுக்க முட்டி மோதும் 4 ஐபிஎல் அணிகள்.. மாஸ்

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் இந்திய அணி விளையாடிக்கொண்டு இருக்கும் போது தமிழக வீரர் ஒருவர் தற்போது இந்திய அளவில் வைரலாகி வருகிறார்.

இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி அதிரடியாக பேட்டிங் செய்து வருகிறது. ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி 80 ரன்களை எடுத்துள்ளார்.

இன்று அவர் சதம் அடிக்க அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 106 ரன்கள் எடுத்துள்ளது.

என்ன

என்ன

இந்த நிலையில் இங்கிலாந்து தொடருக்கு இடையே இன்னொரு பக்கம் ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் 18ம் தேதி சென்னையில் நடக்கிறது. இரண்டாவது டெஸ்ட் முடிந்த பின் இந்த ஏலம் நடக்க உள்ளது.

பின்னணி

பின்னணி

இந்த நிலையில் இந்த ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர் ஒருவர் அதிக தொகைக்கு செல்ல வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அதன்படி தமிழக வீரர் ஷாருக்கான் இந்த ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. இவர் சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தமிழக அணிக்காக சிறப்பாக ஆடினார்.

தமிழக வீரர்

தமிழக வீரர்

சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தமிழக வீரர் ஷாருக்கான் சிறந்த பினிஷர் வீரராக செயல்பட்டார். தமிழக அணி தோல்வி அடைய வேண்டிய போட்டிகளில் பலவற்றில் அணியை வெற்றிபெற வைக்க காரணமாக இருந்தார். இதனால் இவரை ஐபிஎல் அணிகள் கவனிக்க தொடங்கி உள்ளது.

ராஜஸ்தான் அணி

ராஜஸ்தான் அணி

இவரை ஏற்கனவே ராஜஸ்தான் அணி சோதனை செய்வதற்காக அழைத்து இருக்கிறது. அதேபோல் இன்னொரு பக்கம் இவரை கொல்கத்தா அணியும் டெஸ்ட் செய்வதற்காக அழைத்து இருக்கிறது. இதனால் இரண்டு அணிகளும் இவரை எடுக்க முயற்சி செய்யும்.

அதிக தொகை

அதிக தொகை

இது போக பெங்களூர் மற்றும் சிஎஸ்கே அணியும் இவரை எடுக்க முயற்சி செய்யும் என்கிறார்கள். இந்த நான்கு அணிகளும் இந்த ஒரு வீரருக்கு அதிக போட்டி போடும் என்று கூறப்படுகிறது. இதனால் ஷாரூஉக்கன் பல கோடி ரூபாய்க்கு ஏலம் செல்ல வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Story first published: Saturday, February 13, 2021, 13:48 [IST]
Other articles published on Feb 13, 2021
English summary
A Tamilnadu player may get more attention in the upcoming IPL 2021 due to his form.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+