உங்களை எடுத்ததே பெருசு.. இதுல ரெக்கமண்டேஷன் வேறயா?.. தமிழக வீரரை விளாசும் ஐபிஎல் டீம்.. அதிருப்தி
சென்னை: ஐபிஎல் 2021 தொடரில் முக்கியமான ஐபிஎல் அணி ஒன்றில் ஏகப்பட்ட திருப்பங்கள் நடந்து வருகிறது.
2021 ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது. ஐபிஎல் தொடரில் இருக்கும் 8 அணிகளும் இதற்கு தீவிரமாக தயாராகி வருகிறது.
வரும் 18ம் தேதி இதற்கான மினி ஏலம் சென்னையில் நடைப்பெற உள்ளது. இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் முக்கியமான வீரர்களை குறி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்பு
நடந்து முடிந்துள்ள சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் இளம் வீரர்கள் பலர் சிறப்பாக ஆடினார்கள் . ஒவ்வொரு அணியிலும் இருக்கும் இளம் வீரர்கள் பலர் பெரிய அளவில் நம்பிக்கை அளித்தனர். தமிழக வீரர்கள் தொடர் முழுக்கவே ஆதிக்கம் செலுத்தினார்கள்.

தமிழக வீரர்கள்
தமிழக வீரர்கள் சாய் கிஷோர், என் ஜெகதீசன், பாபா அபராஜித், சித்தார்த் மணிமாறன், ஷாருக்கான் ஆகிய வீரர்கள் தமிழக அணியில் பெரிய அளவில் நம்பிக்கை அளித்தனர். இதில் ஜெகதீசன், சாய் கிஷோர் ஏற்கனவே சிஎஸ்கேவில் உள்ளனர். முருகன் அஸ்வின் பஞ்சாப் அணியில் இருக்கிறார்.

போன் கால்
ஷாருக்கானுக்கு ராஜஸ்தான் அணியும், கொல்கத்தா அணியும் போன் செய்து வரச்சொல்லி இருக்கிறது. ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக டெஸ்டிங் செய்யும் விதமாக இவரை அழைத்து இருக்கிறது. இந்த நிலையில் ஐபிஎல் 2021 தொடரில் முக்கியமான ஐபிஎல் அணி ஒன்றில் ஏகப்பட்ட திருப்பங்கள் நடந்து வருகிறது.

எப்படி
முக்கியமான அணி ஒன்றில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அந்த அணியில் இருக்கும் தமிழக வீரர் ஒருவர் இதற்காக தனக்கு நெருக்கமான வீரர்களின் பெயர்களையே பரிந்துரை செய்துள்ளார். இந்த வீரர்களை எல்லாம் ஏலம் எடுங்கள் என்று தனக்கு நெருக்கமான வீரர்களை பரிந்துரை செய்துள்ளார்.

ஆனால் என்ன
ஆனால் இந்த மூத்த வீரரின் பரிந்துரையை அணி நிர்வாகம் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. அந்த மூத்த வீரரை அணியில் இருந்து நீக்காமல் இருப்பதே பெரிய விஷயம். அவரை அணியில் வைத்து இருப்பதே பெரிய விஷயம். இப்படி இருக்கும் போது அவர் தனக்கு வேண்டப்பட்ட வீரர்களை பரிந்துரை செய்கிறார்.

பரிந்துரை
இப்படி தனக்கு வேண்டப்பட்ட வீரர்களை இவர் பரிந்துரை செய்வது நியாயம் இல்லை என்று அந்த அணி நிர்வாகம் கருதுகிறது. இதனால் அந்த வீரரின் பரிந்துரைகளை ஏற்கும் எண்ணத்தில் ஐபிஎல் அணி இல்லை என்கிறார்கள். அதோடு அந்த தமிழக வீரரை இந்த சீசனோடு கழட்டிவிடும் எண்ணத்திலும் ஐபிஎல் அணி உள்ளது.


Click it and Unblock the Notifications