அந்த இடத்தில் சிக்கியிருக்க வேண்டும்.. தப்பிவிட்டது.. ஆர்சிபி-ல் நடந்த அந்த மாற்றங்கள்.. முழு விவரம்
மும்பை: ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி ஒரு இடத்தில் நன்கு திணறும் என எதிர்பார்த்தேன் ஆனால் தப்பிவிட்டது என முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்துபடைத்து வந்த ஐபிஎல் தொடர் கொரோனா காரணமாக பாதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த தொடர் நிறுத்தப்பட்டதில் மற்ற அணிகளை விட ஆர்சிபி அணியும், அதன் ரசிகர்களும் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். ஏனென்றால், யாரும் எதிர்பார்காத வகையில் அதிரடி காட்டி வந்தது ஆர்சிபி அணி.

அசத்தல் ஆட்டம்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ராயல் சேலஞ்சர்ஸ் அணி மற்ற அணிகளை மிரட்டி வந்தது. அணியின் பேட்டிங்கில் பட்டிகல், கோலி, டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல், பந்துவீச்சீல் ஹர்ஷல் பட்டேல் என அட்டகாசம் செய்தது. இதனால் இந்த தொடரில் புள்ளிப்பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் ஆர்சிபி அணி டெத் ஓவர்களில் சொதப்பும் என நினைத்த நிலையில் பெரிய மாற்றம் செய்துள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

பிரச்னை
இதுகுறித்து பேசியுள்ள அவர், ஆர்சிபி அணியில் முக்கிய பிரச்னையாக டெத் ஓவர்களில் நல்ல பவுலர்கள் இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த சீசனில் அது சிறப்பாக அமைந்துள்ளது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் சென்னை பிட்ச்-ல் அவர்களின் பவுலிங் எடுபடாது. ஆனால் அங்கே அற்புதமாக வீசினார்கள்.

டெத் ஓவர்கள்
2019ம் ஆண்டு ஆர்சிபி அணியின் டெத் ஓவர்கள் மிக மோசமாக இருக்கும். ஓவருக்கு 12 -13 ரன்கள் பறக்கும். ஆனால் இந்தாண்டு கடைசி டெத் ஓவர்களில் 10 ரன்களுக்கும் குறைவாக செல்கிறது. இரண்டு போட்டிகளில் ஹர்ஷல் பட்டேல் கடைசி ஓவரில் ரன்களை வாரி வழங்கிய போதும் டெத் ஓவர் சராசரி சிறப்பாக உள்ளது. அது ஆர்சிபி அணி சரியான பாதையில் சென்றுக்கொண்டிருப்பதற்கு உணர்த்துகிறது.

முக்கிய காரணம்
இதற்கெல்லாம் முக்கிய காரணம் ஹர்ஷல் பட்டேல் எனக்கூறலாம். இவர் இந்த ஐபிஎல் தொடரில் 17 விக்கெட்களை எடுத்து அதிக விக்கெட் எடுத்த வீரராக திகழ்கிறார். இந்தாண்டின் முதல் போட்டியில் மும்பைக்கு எதிராக 5 விக்கெட்களை அவர் எடுத்த போதே ஆர்சிபி அணியில் பெரும் மாற்றம் நிகழ்ந்தது எனத்தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications