Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முடி வெட்டிய கே.எல். ராகுல்.. கட்டம் கட்டி கலாய்த்த 2 நடிகைகள்.. என்னம்மா அங்க சத்தம்

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் முடி வெட்டிய போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார். அதைப் பார்த்த 2 நடிகைகள் அவரது தலையழகை கலாய்த்துள்ளனர்.

Recommended Video

Sachin Tendulkar's rare bowling records

இந்திய கிரிக்கெட் வீரர்களில் முக்கியமானவர் ராகுல். தற்போது விளையாட முடியாமல் போயுள்ளதால் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தைப் போட்டுள்ளார்.

விக்கெட் கீப்பர் -பேட்ஸ்மேன் ஆன ராகுல், தான் முடி வெட்டிய பிறகு எடுத்த போட்டோவை அதில் போட்டுள்ளார். அப்போட்டோவுடன், 'மைன்ட் கான் ஹேர் கான்' என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.

நடிகைகள் கமெண்ட்

நடிகைகள் கமெண்ட்

இதையடுத்து வழக்கம் போல ரசிகர்கள் கமெண்ட்டுகளைக் குவிக்க ஆரம்பித்து விட்டனர். அதில் 2 பேருடைய கருத்துக்கள்தான் அனைவரையும் கவர்ந்துள்ளது. காரணம் அந்த இரண்டு பேரும் நடிகைகள். ஒருவரது பெயர் அகான்ஷா ரஞ்சன் கபூர். இன்னொருவருடைய பெயர் அனுஷ்கா ரஞ்சன். ஆளுக்கொரு கமெண்ட்டைப் போட்டு விட்டு அவர்கள் போய் விட்டனர். அதை வைத்து பலர் ஓட்டிக் கொண்டுள்ளனர்.

பாலிவுட் நடிகைகள்

பாலிவுட் நடிகைகள்

அகன்ஷா ரஞ்சன் கபூர் கில்ட்டி என்ற நெட் பிளிக்ஸ் படத்தில் நடித்தவர். இன்னொருவர் அனுஷ்கா ரஞ்சன் பல இந்திப் படங்களில் நடித்துள்ளார். இருவருமே ராகுல் போட்டோவுக்கு கமெண்ட் போட்டுள்ளனர். அனுஷ்கா போட்ட கமெண்ட்... "Laaaahuuullll," என்று உள்ளது. அதாவது அவரது தலையில் முடியே இல்லை என்பதை சுட்டிக்காட்டி இப்படி கலாய்த்துள்ளார்.

நோ வேஸ் கமண்ட்

நோ வேஸ் கமண்ட்

அகான்ஷா கொடுத்துள்ள கமெண்ட்டில், "No wayz" என்று கூறியுள்ளார். கொஞ்ச காலமாகவே ராகுல் சமூக வலைதளத்தில் அதிகம் புழங்கிக் கொண்டிருக்கிறார். ஏதாவது வீடியோ போட்டுக் கொண்டிருக்கிறார். ரசிகர்களுடன் பேசுகிறார். கொரோனா காரணமாக கிட்டத்தட்ட எல்லா வீரர்களுமே இப்படித்தான் ரசிகர்களுடன் அதிகம் பேசுகின்றனர். சமீபத்தில் கூட ராகுல் தனது ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்திருந்தார்.

பஞ்சாப் கேப்டன்

பஞ்சாப் கேப்டன்

இந்திய அணியில் முக்கிய இடம் வகிக்கும் ராகுல், தனக்குப் பிடித்த வீரர் ஏபி டிவில்லியர்ஸ் என்று சமீபத்தில் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். தற்போது ஐபிஎல் போட்டிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக ராகுல் விளங்குகிறார். இந்த சீசன் நடத்தப்பட முடியாமல் முடங்கிக் கிடப்பதால் ராகுலும் கூட ஏமாற்றமடைந்துள்ளார். இருப்பினும் தன்னைத் தானே ரெப்ரஷ் செய்து கொண்டபடி வீரர்கள் உள்ளனர்.

Story first published: Monday, May 25, 2020, 18:27 [IST]
Other articles published on May 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+