Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

AFG vs ZIM: 5 ரன்னில் 4 விக்கெட்.. அப்புறம் வரலாற்று சம்பவம் செய்த அஸ்மத்துல்லா ஒமர்சாய்

ஷார்ஜா: ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அஃகானிஸ்தான் வீரர் அஸ்மத்துல்லா உமர்சாய் சதம் விளாசி வரலாற்று சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் தொடக்கத்திலேயே தடுமாறிய அஃகானிஸ்தான் அணி, உமர்சாயின் அதிரடியால் மீண்டு வந்து 20 ஓவர்களில் 221/7 ரன்கள் குவித்தது.

ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், அஃகானிஸ்தான் அணி 5 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தபோது உமர்சாய் களமிறங்கினார். எதிரணி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த அவர், வெறும் 50 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்ஸர்களுடன் 232 ஸ்டிரைக் ரேட்டில் 116 ரன்கள் குவித்தார்.

AFG vs ZIM-

இதன் மூலம், டி20 சர்வதேச போட்டிகளில் முழு உறுப்பினர் நாடுகளுக்கு இடையிலான ஆட்டங்களில் 6-வது அல்லது அதற்கு கீழ் வரிசையில் களமிறங்கி அதிக ரன்கள் குவித்த பேட்டர் என்ற சாதனையை உமர்சாய் படைத்தார். முன்னதாக 2017-ல் அயர்லாந்திற்கு எதிராக அஃகானிஸ்தானின் முன்னாள் கேப்டன் முகமது நபி அடித்த 89 ரன்களே சாதனையாக இருந்தது.

IND vs NZ: 57 ரன்களில் கிளன் பிலிப்ஸ் கொடுத்த ஈஸி கேட்ச்.. கோட்டை விட்ட நமன் தீர்.. ஆட்டத்தை மாற்றிய தருணம்

IND vs NZ: 57 ரன்களில் கிளன் பிலிப்ஸ் கொடுத்த ஈஸி கேட்ச்.. கோட்டை விட்ட நமன் தீர்.. ஆட்டத்தை மாற்றிய தருணம்

மேலும், இந்த சாதனையின் மூலம் சாம் பில்லிங்ஸ் 87 ரன்கள், கேமரூன் ஒயிட் 85 ரன்கள் மற்றும் டேவிட் மில்லர் 85 ரன்கள் ஆகியோரின் சாதனைகளையும் உமர்சாய் முறியடித்துள்ளார்.முன்னதாக, ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்களின் அதிரடியால் அஃகானிஸ்தானின் மேல்வரிசை பேட்டர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சாதிக்வுல்லா அடல் 21 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்து 9-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

இந்தச் சூழலில், உமர்சாயுடன் இணைந்த இஜாஸ் அகமது அகமத்சாய் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இவர்கள் 59 பந்துகளில் 142 ரன்கள் குவித்து அணியை மீட்டெடுத்தனர். இதில் இஜாஸ் அகமது 27 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 52 ரன்கள் விளாசினார்.

அணி 180 ரன்களை எட்டியபோது இஜாஸ் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய உமர்சாய் 19-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அஃகானிஸ்தான் டி20 வரலாற்றுப் பக்கங்களில் இது மிகச்சிறந்த மீட்சி ஆட்டங்களில் ஒன்றாக அமைந்தது.

இறுதிக்கட்டத்தில் கேப்டன் ரஷீத் கான் 6 பந்துகளில் 4 சிக்ஸர்கள் உட்பட ஆட்டமிழக்காமல் 25 ரன்கள் விளாசினார். முஜீப் உர் ரஹ்மான் 2 ரன்களுடன் களத்தில் இருந்தார். அஃகானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் சேர்த்தது.இப்போட்டியின் போது ரஷீத் கான் டி20 சர்வதேச போட்டிகளில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளர் என்ற வரலாற்று மைல்கல்லையும் எட்டினார்.

222 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு கேப்டன் சிகந்தர் ரசா தனது இரண்டாவது டி20 சதமடித்து போராடினார். இருப்பினும், ஜிம்பாப்வே அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. அந்த அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது. அறிமுக வீரர் தஃபத்ஸ்வா த்சிகா ஓரளவு ஒத்துழைப்பு அளித்தார். ரியான் பர்ல் ஆட்டமிழந்தது ஜிம்பாப்வேயின் வெற்றி வாய்ப்பை மேலும் பாதித்தது.

IND vs NZ: எங்களுடைய இந்த ஒரே திட்டத்தால் இந்திய அணியை வீழ்த்தினோம்.. பிலிப்ஸ் ஓபன் டாக்

Also Read

IND vs NZ: எங்களுடைய இந்த ஒரே திட்டத்தால் இந்திய அணியை வீழ்த்தினோம்.. பிலிப்ஸ் ஓபன் டாக்

இந்த வெற்றியின் மூலம் ஜிம்பாப்வேக்கு எதிரான தனது ஆதிக்கத்தை அஃகானிஸ்தான் நீட்டித்துள்ளதுடன், தொடர்ச்சியாக 8-வது டி20 தொடரைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. ஜிம்பாப்வே அணி இதுவரை அஃகானிஸ்தானுக்கு எதிராக ஒரு டி20 தொடரைக் கூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, October 30, 2026, 18:46 [IST]
Other articles published on Oct 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+