IND vs NZ: எங்களுடைய இந்த ஒரே திட்டத்தால் இந்திய அணியை வீழ்த்தினோம்.. பிலிப்ஸ் ஓபன் டாக்
மும்பை: இந்தியாவுக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து அணி இழந்தாலும், 4வது டி20 போட்டியில் 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து வீரர் கிளன் பிலிப்ஸ், 49 பந்துகளில் 107 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
போட்டிக்கு பிறகு பேசிய அவர், பேட்டிங் செய்ய மிகவும் சாதகமான ஆடுகளமாக இது இருந்தது. அதைப் முழுமையாக பயன்படுத்தி அணியின் வெற்றிக்குப் பங்களித்தது மகிழ்ச்சியளிக்கிறது.காற்றின் திசையை கணக்கிடும்போது ஒரு குறிப்பிட்ட முனையில் இருந்து ரன்கள் அடிப்பது எளிதாக இருந்தது.

ஆனால், மைகேல் பிரேஸ்வெல் பந்துகளை அடித்து ஆடும் விதத்திற்கு எந்த முனையாக இருந்தால் என்ன என்றே தோன்றியது. போட்டி மிகக் கடுமையான கட்டத்தில் இருந்தபோது, நாங்கள் அமைத்த இந்த அதிரடி பார்ட்னர்ஷிப் ஆட்டத்தின் போக்கை இந்திய அணியிடமிருந்து எங்களுக்குச் சாதகமாக மாற்ற உதவியது.
கிரிக்கெட்டில் இதுபோன்ற ஏற்ற இறக்கங்கள் இயல்பானவை. சில காலங்களில் பந்து மிகத் தெளிவாகக் கண்ணுக்குத் தெரியும், சில நேரங்களில் அது கடினமாக இருக்கும். எனவே, தற்போது கிடைத்துள்ள இந்தச் சிறப்பான ஃபார்மை முடிந்தவரை நீட்டிக்கவும், மைதானத்தில் தொடர்ந்து சரியான முடிவுகளை எடுக்கவும் முயற்சி செய்து வருகிறேன்.
தற்போது தொடைப் பகுதி பரவாயில்லை, பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது என நம்புகிறேன். இது முற்றிலும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையே. அடுத்து வரவிருக்கும் தொடர்கள் மிக முக்கியமானது என்பதால், களத்தில் 100 சதவீத உழைப்பைக் கொடுக்க முடியாத சூழலில் தேவையற்ற ஆபத்துகளை எதிர்கொள்ள வேண்டாம் என்றே ஃபீல்டிங்கின் போது ஓய்வெடுக்க முடிவு செய்தேன் என்று கிளன் பிலிப்ஸ் கூறினார்.


Click it and Unblock the Notifications


