IND vs NZ: இந்த நியூசிலாந்து வீரரிடம் பாடம் கற்று கொள்ளனும்.. தோல்வி குறித்து யோசிப்போம்- ஸ்ரேயாஸ்
ஆக்லாந்து: இந்திய அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் நடப்பு தொடரில் நியூசிலாந்து அணி முதல் வெற்றியை பெற்றது. இந்திய அணி பேட்டிங் வரிசையையும், பிளேயிங் லெவனையும் மாற்றியது தோல்விக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்த இந்திய அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், இப்போட்டியில் பவர்பிளேயின் 3வது ஓவரில் இருந்தே நியூசிலாந்து அணி அதிரடியாக ரன்களை குவித்து ஆட்டத்தின் வேகத்தைத் தன் வசப்படுத்தியது. கிளென் பிலிப்ஸ், அபாரமாக விளையாடியதாக பாராட்டினார்.

"பவர்பிளேயில், குறிப்பாக 3வது ஓவரில் இருந்து அவர்கள் ஆட்டத்தின் வேகத்தை அதிகரித்துக் கொண்டனர். எங்களது பந்துவீச்சாளர்கள் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்த முயன்றபோதிலும், கிளென் ஃபிலிப்ஸ் அற்புதமாக விளையாடினார். இந்தத் தொடர் முழுவதும் அவர் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன" என்று தெரிவித்தார்.
அடுத்ததாக ஹேமில்டனில் நடைபெறவுள்ள போட்டிக்கு முன்பாக, எங்கு தவறு நடந்தது என்பதை ஆய்வு செய்து மீண்டும் வலுவாக மீண்டு வருவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. மைதானத்தின் பரிமாணங்கள் குறித்துப் பேசிய அணித் தரப்பு, சில வீரர்களுக்கு இதுபோன்ற மைதானங்களில் விளையாடுவது இதுவே முதல் முறை என்பதால், இந்தச் சவாலுக்கு ஏற்ப தங்களை மாற்றி கொள்ள கொள்ளச் சிறிது காலம் பிடிக்கும். இது போன்ற மைதானத்தில் எங்கள் அணி வீரர்கள் மதுல் முறையாக விளையாடுகின்றனர்.
முதல் மூன்று போட்டிகளில் வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்ட நிலையில், இந்தத் தோல்வி ஒரு நல்ல கற்றல் அனுபவமாக இருக்கும் என்றும், அடுத்த போட்டியில் நேர்மறையான அணுகுமுறையுடன் களம் இறங்கி மிகச்சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்துவோம் என்று ஸ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications


