Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

”ஒவ்வொரு முறையும் அடிவாங்கினா எப்படி வலிக்கும்” இந்திய அணியை வச்சு தரமாக செய்யும் ரசிகர்கள்!

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ள நிலையில், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் உருவாக்கியுள்ள மீம்ஸை பார்க்கலாம்.

After the failure of Indian Team in WTC Final, Fans created some stunning Memes from Social Media

கில்லி படத்தில் நடிகர் விஜய், "தம்மாதூண்டு பிளேடு மேல வச்ச நம்பிக்கைய, உன்மேல வை.. ஜெய்ப்ப" என்று வில்லனிடம் சொல்வார். அதனை மாற்றி ஆஸ்திரேலிய அணியாக விஜயையும், இந்திய அணியாக வில்லனையும், "எப்போ நீ பிட்ச், சூழல் பார்த்துட்டு அஸ்வினை கழற்றிவிட்டியோ.. அப்போவே நீ தோத்துட்ட டா.. தம்மாதூண்டு பிட்ச் மேல வச்ச நம்பிக்கைய.. நீ உன் பிளேயர்ஸ் மேல வை" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாஸ்.

After the failure of Indian Team in WTC Final, Fans created some stunning Memes from Social Media

கடந்த 10 ஆண்டுகளில் 9வது முறையாக ஐசிசி தொடர்களில் தோல்வியடைந்து இந்திய அணி வெளியேறியுள்ளது. இதனை கிண்டல் செய்யும் வகையில், "அவனுங்க பைனல் ஆட கூப்டுவானுங்க.. ஆனால் நீ என்ன சொல்லிருக்கனும்.. அய்யா ஐசிசி தொடர்ல நாங்க ஒரு கிளவுன்.. வரலனு சொல்லி இருக்கனும்ல" என்று விஜய் தொலைக்காட்சியின் ராமர் சொல்லும் வசனத்தை மாற்றி உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

After the failure of Indian Team in WTC Final, Fans created some stunning Memes from Social Media

தலைநகரம் படத்தில் நடிகர் வடிவேலுவின் கடைசி காட்சியில், "எனக்காடா என்டு கார்டு போடுறீங்க.. எனக்கு என்டே கிடையாதுடா.. என்னுடைய அடுத்த எய்ம் நயன்தாரா" என்பார். அந்த காட்சியை வடிவேலுவாக இந்திய அணியையும், மயில்சாமியாக ஐசிசியை மாற்றி, மயில்சாமி சொல்வதாக." பல்வேறு PayTM தொடர்களில் பட்டையை கிளப்பிய இந்த கருங்குயில், "WTC" பட்டத்தை கரம்பிடிக்க கனவுகளோடு வந்து கண்டமானதால் மீண்டும் தன் தாயகத்திற்கு சிறகொடிந்து செல்கிறது" என்றும், அதற்கு இந்திய அணி தரப்பில், "டேய் எனக்காடா என்டு கார்டு போட்டு எகத்தாளமா பண்றிங்க.. எனக்கு என்டே கிடையாது.. என்னோட அடுத்த எய்ம் உலகக்கோப்பை" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மரண மாஸ் ரகம்.

After the failure of Indian Team in WTC Final, Fans created some stunning Memes from Social Media

9வது முறையாக ஐசிசி தொடர்களில் இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்துள்ளது. இருப்பினும் இம்முறை ரசிகர்கள் பலரும் கண்டுகொள்ளவில்லை. இதனை உத்தமபுத்திரன் படத்தில் விவேக், "எனக்கு அவங்க அடிச்சது வலிக்கவே இல்லை.. ஏன் தெரியுமா.. டெய்லி அடி வாங்கினா எப்படி வலிக்கும்" என்பார். அதேபோல், இந்திய ரசிகர்கள் சொல்வதாக, எனக்கு அடிச்சது வலிக்கவே இல்ல.. எல்லா ஐசிசி டிராபிலயும் அடி வாங்கினா எப்படி வலிக்கும்" என்று மாற்றி உருவாக்கப்பட்டுள்ள மீம் ஒவ்வொரு ரசிகனின் குமுறல்.

After the failure of Indian Team in WTC Final, Fans created some stunning Memes from Social Media

தலைநகரன் 2 படத்தில் அழுகும் குழந்தையிடம் நடிகர் வடிவேலு, "நான்லாம் அழுக ஆரம்பிச்சா வாழ்க்கை முழுக்க அழுதுட்டே இருக்கனும்" என்பார். அதனை வடிவேலுவாக சச்சினையும், குழந்தையாக கில்லையும் மாற்றி, என்ன.. ஒரு கிளோஸ் முடிவுக்கு உட்கார்ந்து சோசியல் மீடியால இப்படி கதறுற.. நான்லாம் என் கிரிக்கெட் வாழ்க்கைல தப்பா அவுட் கொடுத்துட்டாங்கனு அழுக ஆரம்பிச்சா.. இன்னிக்கு வரை அழுதுட்டு இருந்துருக்கனும்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அசத்தல்.

Story first published: Monday, June 12, 2023, 8:03 [IST]
Other articles published on Jun 12, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+