Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

5 ரன்களுக்கு 5 விக்கெட்..தெறிக்க விட்ட ஆகாஷ் மத்வால்.. லக்னோ அணியில் 3 ரன் அவுட்..பைனல் அருகே மும்பை

சென்னை : ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் போட்டியில் லக்னோவை வீழ்த்திய மும்பை அணி, குவாலிபையர் 2 ஆட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளது. இந்த தோல்வியின் மூலம் லக்னோ அணி தொடரை விட்டு வெளியேறியது. மும்பை இந்தியன்ஸ் வீரர் ஆகாஷ் மத்வானி 4 ரன்களுக்கு 4 விக்கெட்டை வீழ்த்தினார்.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த மும்பை அணியில் ரோகித் சர்மா 11 ரன்களிலும், இஷான் கிஷன் 15 ரன்களிலும் ஆட்டமிழக்க, மும்பை அணி தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த கிரீன், சூர்யகுமார் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது.

Akash madhwal brilliant spell destroys luknow batting and MI won by 81 runs

எனினும் நவீன் உல் ஹக் வீசிய ஒரே ஓவரில் சூர்யகுமார் (33 ரன்கள்) மற்றும் கேமிரான் கிரீன் (41 ரன்களும்) ஆட்டமிழந்தனர். இதனால் 105 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற ஸ்கோருடன் மும்பை அணி மீண்டும் சறுக்கியது. திலக் வர்மா 26 ரன்கள் எடுக்க, டிம் டேவிட் 13 ரன்களில் வெளியேற, இறுதியில் வதேரா 23 ரன்கள் சேர்த்தார்.

இதில் 20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. லக்னோ அணியில் நவீன் உல் ஹக் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியில் மான்கட் 3 ரன்களிலும், குர்னல் பாண்டியா 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

Akash madhwal brilliant spell destroys luknow batting and MI won by 81 runs

கெயில் மேயர்ஸ் 18 ரன்கள் மட்டும் சேர்க்க,அதிரடியாக விளையாடிய மார்கஸ் ஸ்டோனிஸ் 40 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். இதே போன்று ஆகாஷ் மத்வால் வீசிய ஒரே ஓவரில் ஆயுஷ் பதோனி, நிக்கோலஸ் பூரான் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதே போன்று தீபக் ஹூடா, கிருஷ்ணப்பா கௌதம் ஆகியோரும் தொடர்ந்து ரன் அவுட்டாக, பிறகு வந்த வீரர்கள் எல்லாம் வந்த வேகத்தில் திரும்பினர்.

இதன் மூலம் லக்னோ அணி 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் மும்பை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.. மும்பை வீரர் ஆகாஷ் மத்வால் 5 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி, ஐபிஎல் தொடரில் சிறந்த பந்துவீச்சு செயல்பாட்டை பதிவு செய்தார். இதன் மூலம் வெள்ளிகிழமை குவாலிபையர் 2வில் மும்பை அணி, குஜராத்துடன் மோதுகிறது. இதில் வெல்லும் அணி ஞாயிற்றுகிழமை சிஎஸ்கே உடன் மோதும்.

Story first published: Wednesday, May 24, 2023, 23:35 [IST]
Other articles published on May 24, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+