For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? இளம் வீரரை ஓரங்கட்டும் 7 ஐபிஎல் அணிகள்.. பாவம் பார்த்த ஒரே கேப்டன்!

சென்னை: 2021 ஐபிஎல் தொடரில் புதிதாக விளையாட இருக்கும் இளம் வீரர் ஒருவரை ஐபிஎல் அணிகள் பெரிய அளவில் ஏலம் எடுக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.

2021 ஐபிஎல் தொடருக்கு முன்பாக பல முக்கியமான மாற்றங்களை செய்ய ஐபிஎல் அணிகள் முடிவு செய்துள்ளன. ஐபிஎல் மினி ஏலத்தில் முக்கியமான வீரர்களை ஏலம் எடுக்க பல்வேறு அணிகள் முடிவு செய்துள்ளன.

இதற்கான மினி ஏலம் வரும் 18ம் தேதி சென்னையில் நடக்க உள்ளது. இதற்கான திட்டங்களை ஒவ்வொரு அணிகளும் வகுத்து வருகிறது.

ஏலம்

ஏலம்

இந்த நிலையில் 2021 ஐபிஎல் தொடரில் புதிதாக விளையாட இருக்கும் இளம் வீரர் ஒருவரை ஐபிஎல் அணிகள் பெரிய அளவில் ஏலம் எடுக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள். இந்த ஐபிஎல் தொடருக்காக சச்சின் டெண்டுலர்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் தனது பெயரை பதிவு செய்துள்ளார். இவரின் அடிப்படை விலை 20 லட்சம் ரூபாய்.

பவுலிங்

பவுலிங்

அப்பா போல பேட்டிங் செய்யாமல் இவர் முழு நேர பவுலராக இருக்கிறார். இவரின் பவுலிங் ஆக்சன் பார்க்க நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் அர்ஜுனை விக்கெட்டுகள் எடுத்தது இல்லை. முதல் தர போட்டிகளில் மும்பை அணியில் இவர் சிறப்பாக ஆடியது இல்லை. இவருக்கு உலகத்தரமான பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு

வெளிநாடு

வெளிநாடு சென்று பயிற்சி பெற்று இருக்கிறார். இந்திய அணி வீரர்களுடன் வலைப்பயிற்சியில் அர்ஜுன் பந்து வீசி இருக்கிறார். ஆனாலும் இவரின் பவுலிங் பெரிய அளவில் முன்னேற்றம் அடையவில்லை. இந்த நிலையில்தான் தற்போது ஐபிஎல் தொடருக்காக இவர் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

பெயர்

பெயர்

இதனால் தற்போது இவரை ஏலம் எடுக்க அணிகள் எதுவும் விருப்பம் தெரிவிக்காது என்கிறார்கள். அர்ஜுன் பவுலிங் ஸ்டைல் தேவையாக இருக்கும் அணிகள் எதுவும் இல்லை. கிட்டத்தட்ட எல்லா அணியிலும் ஸ்பீட் பவுலிங் ஸ்லாட் சிறப்பாக இருக்கிறது.

பெங்களூர்

பெங்களூர்

பெங்களூர் அணியில் மட்டுமே பவுலர்கள் தேவை உள்ளது. ஆனால் அந்த அணியும் கூட அர்ஜுனை குறி வைக்க வாய்ப்பு இல்லை. பெரும்பாலும் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சச்சின் உடன் இருக்கும் பழக்கத்தால் போனால் போகட்டும் என்பதற்காக அர்ஜுனை அடிப்படை விலைக்கு எடுக்க வாய்ப்புகள் உள்ளது.

Story first published: Thursday, February 11, 2021, 16:02 [IST]
Other articles published on Feb 11, 2021
English summary
Arjun Tendulkar may not get many bids in the upcoming IPL 2021 mini auction.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+