Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாரை பார்த்து வாரிசு என்று சொன்னீர்கள்.. பொங்கி எழுந்த சச்சின் மகன்.. சந்தோஷத்தில் ரோஹித் சர்மா!

சென்னை: சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் தன்னை சிறந்த ஆல் ரவுண்டர் என்று நிரூபித்துள்ளார்.

ஐபிஎல் 2021 தொடருக்கான மினி ஏலம் கவனம் பெற்றுள்ளது. இந்த மினி ஏலம் வரும் 18ம் தேதி சென்னையில் நடக்கிறது.

ஐபிஎல் தொடரில் உள்ள 8 அணிகளும் முக்கியமான வீரர்களை குறி வைத்து இந்த ஏலத்திற்காக காத்து இருக்கிறது. 1000க்கும் அதிகமான வீரர்கள் இதில் தங்கள் பெயர்களை பதிவு செய்தனர்.

சிறப்பு

சிறப்பு

இதில் பிசிசிஐ இறுதியாக 292 வீரர்களை ஏலத்திற்கு தேர்வு செய்தது. இதில் 164 உள்நாட்டு, 125 வெளிநாட்டு வீரர்கள், 3 துணை நாடுகளின் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அர்ஜுன் டெண்டுல்கர் போன்ற இளம் வீரர்களின் பெயர் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. பல நாட்களாக கிரிக்கெட் ஆடாத மோர்னி மோர்கல் போன்ற வீரர்களின் பெயர்களும் கூட இந்த லிஸ்டில் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

சேர்ப்பு

சேர்ப்பு

ஐபிஎல் ஏலத்தில் அர்ஜுன் டெண்டுல்கர் பெயர் இடம்பெற்றது பெரிய அளவில் சர்ச்சையானது. இவருக்கு திறமையே இல்லை. முதல்தர போட்டிகளில் பெரிய அளவில் ஆடவில்லை. இவர் பவுலர்தான். ஆனாலும் அதில் பெரிதாக சாதிக்கவில்லை என்று இவருக்கு எதிராக விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

சாதனை

சாதனை

இந்த நிலையில் தன்னை சிறந்த ஆல் ரவுண்டர் என்று அர்ஜுன் டெண்டுல்கர் நிரூபித்துள்ளார். அதன்படி தற்போது நடந்து வரும் கிளப் போட்டிகளால் போலீஸ் ஷீல்ட் கிரிக்கெட் தொடரில் அசத்தி உள்ளார். மிக் கிரிக்கெட் கிளப் சார்பாக ஆடிய வெறும் 26 பந்தில் 77 ரன்கள் எடுத்தார்.

எத்தனை

எத்தனை

இதில் 8 சிக்ஸ், 5 பவுண்டரிகள் அடித்தார். இன்னொரு பக்கம் பவுலிங்கிலும் 40 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். இவரின் ஆட்டத்தால் இஸ்லாம் ஜிம்கானா அணி மோசமாக சுருண்டது. இதில் முதலில் ஆடிய மிக் அணி 385 ரன்கள் எடுத்தது. இதன்பின் ஆடிய இஸ்லாம் ஜிம்கானா அணி 191 ரன்கள் எடுத்தது.

ஆட்டம்

ஆட்டம்

இவரின் ஆட்டத்தை பார்த்து ஐபிஎல் அணிகள் சந்தோஷத்தில் இருக்கிறது. முக்கியமாக மும்பை அணி இவரை பார்த்து சந்தோஷத்தில் இருக்கிறது. மும்பை அணிதான் இவரை குறி வைக்கும் எண்ணத்தில் உள்ளது.

சிறப்பு

சிறப்பு

இப்படிப்பட்ட நிலையில்தான் அர்ஜுன் சிறப்பாக ஆடி வருகிறார். அதிலும் ஆல் ரவுண்டர் என்று நிரூபித்துள்ளார். இதனால் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இவரை எடுக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Story first published: Monday, February 15, 2021, 15:16 [IST]
Other articles published on Feb 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+