Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது ரிட்டயர்ட் ஹர்ட்டா? இல்லை ரிட்டயர்ட் அவுட்டா? குர்னல் பாண்டியா முடிவு-விவாதத்தை கிளப்பிய அஸ்வின்

லக்னோ : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முக்கிய ஆட்டத்தில் லக்னோ அணியிடம் மும்பை அணி தோல்வியை தழுவியது. இதன் மூலம் லக்னோ அணி 15 புள்ளிகள் பெற்றுள்ளது. எனினும் சென்னை அணியின் ரன் ரேட் அதிகமாக இருப்பதால் சிஎஸ்கே 2வது இடத்தில் நீடிக்கிறது.

இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் ஸ்டோனிஸ்க்கு பக்கபலமாக கேப்டன் குர்னல் பாண்டியா நின்று 42 பந்துகளை எதிர்கொண்டு 49 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் ஆடுகளம் தோய்வாக இருந்ததால் குர்னல் பாண்டியாவால் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்க்க முடியவில்லை.

Ashwin created discussion on twitter about krunal pandya decision

இதனால் குர்னல் பாண்டியா தம் அரைசதம் பற்றி கவலைப்படாமல், மற்ற பேட்ஸ்மேனாவது அதிரடியாக விளையாட வேண்டும் என்று நினைத்து, ஆட்டமிழக்காமலே களத்தை விட்டு வெளியேறினார். ஆனால் அதற்கு நடுவர் ரிட்டயர் ஹர்ட் என்று கூறி இருந்தார். ஸ்கோர் கார்டிலும் அப்படி தான் இருந்தது.

ஆனால், கடந்த ஆண்டு அஸ்வின் விளையாடிய பாது, அதிரடியாக விளையாட முடியவில்லை என்று கூறி விட்டு வெளியேறினார். இதற்கு நடுவர் ரிட்டயர் அவுட் என்று வழங்கி இருந்தார். இதனை குறிப்பிடும் வகையில், ரிட்டயர்ட் அவுட் இல்லையா என்று கேள்வி கேட்டு இருந்தார்.

Ashwin created discussion on twitter about krunal pandya decision

இது தற்போது சமூக வலைத்தளத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட்டில் ரிட்டயர்ட் ஹர்ட் என்ற வார்த்தை தான இருப்பதாகவும், ரிட்டயர்ட் அவுட் இல்லை என்று ஒரு சிலரும், ரிட்டயர்ட் அவுட் என்றால் மீண்டும் பேட்டிங் செய்ய வரமுடியாது என்று ஒரு சிலரும் கூறி வருகின்றனர். இது குறித்து ஐசிசி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Story first published: Wednesday, May 17, 2023, 22:43 [IST]
Other articles published on May 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+