Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வின்-மோர்கன் மோதல்: வார்னுக்கு பதிலடி.. அஸ்வினுக்கு ஆதரவாக கருத்து கூறிய டெல்லி உரிமையாளர்!

டெல்லி: அஸ்வின்-மோர்கன் இடையிலான மோதலில் டெல்லி கேபிடல்ஸ் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால் அஸ்வினுக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளார். டி20 கிரிக்கெட் போட்டி என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இதேபோல் சில முட்டல், மோதல்களும் வந்து போகும்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பின்னரான தமிழகத்தை சேர்ந்த அஸ்வினுக்கும், இங்கிலாந்தை சேர்ந்த இயான் மோர்கனுக்கும் மோதல் ஏற்பட்டது கிரிக்கெட் உலகில் பேசும் பொருளாக உள்ளது.

ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணியும், டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியில் டெல்லி அணி பேட்டிங் செய்த போது, அஸ்வினும், ரிஷப் பண்ட்டும் களத்தில் இருந்தனர். வெங்கடேஷ் வீசிய ஓவரில், பண்ட் ஒரு ரன் அடித்துவிட்டு ஓடினார்.

கடும் மோதல்

கடும் மோதல்

அந்த பந்தை திரிபாதி எடுத்து த்ரோ வீசியபோது, பந்து பண்ட் உடலில் பட்டு எதிர் திசையில் சென்றது. இதனால் அஸ்வின் அவரை இரண்டாவது ரன் ஓட கூப்பிட்டார். பண்ட்டும் இரண்டாவது ரன்னுக்கு சென்றார், இது தொடர்பாக இயான் மோர்கன் அஸ்வினுடன் மோதலில் ஈடுபட, இருவருக்கும் இடையே மோதல் தீவிரம் அடைந்ததது. தினேஷ் கார்த்திக் அஸ்வினை சமாதானம் செய்தார். பீல்டர் பந்தைப் பிடித்து எறியும்போது உடலில் பட்டுவிட்டால் பேட்ஸ்மேன் அடுத்த ரன் ஓடமாட்டார்கள். இது விதிமுறை இல்லாவிட்டாலும், இந்த மரபு கிரிக்கெட்டில் கடைபிடிக்கப்படுகிறது.

உரிமை இருக்கிறது

உரிமை இருக்கிறது

அஸ்வினுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஷேன் வார்ன், ' அஸ்வின் செயல் அவமானம், இந்தத் விவகாரத்தாலும், அஸ்வினாலும் இந்த உலகம் பிளவுபடக்கூடாது. இதுபோல் ஒருபோதும் நடக்கக்கூடாது. ஏன் அஸ்வின்மீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஆளாகிறார். மோர்கனுக்கு அஸ்வின் மீது குற்றம்சாட்ட ஒவ்வொரு உரிமையும் இருக்கிறது' என்று கூறினார்.

ஆதரவு குரல்கள்

ஆதரவு குரல்கள்

அதே வேளையில் அஸ்வினுக்கு ஆதரவாகவும் குரல்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் டெல்லி கேபிடல்ஸ் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால் அஸ்வினுக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஆட்டத்தை நினைவுபடுத்தி கருத்து கூறியுள்ளார்.

பார்த் ஜிண்டால்

பார்த் ஜிண்டால்

50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் டிரன்ட் போல்ட் வீசிய ஓவரில் மார்டின் கப்தில் பந்தை பீல்டிங் செய்து ரன் அவுட் செய்ய எறிந்தார். அப்போது பந்து பென் ஸ்டோக்ஸ் பேட் மீது பட்டு பவுண்டரிக்குச் சென்றுவிடும். இதைப் பார்த்த நடுவர் தர்மசேனா, 6 ரன்களை வழங்குவார். இந்த 6 ரன்களால்தான் பெரிய திருப்புமுனை ஏற்பட்டு ஆட்டம் சமனில் முடிந்தது. இதை சுட்டிகாட்டிய பார்த் ஜிண்டால், '' பென் ஸ்டோக்ஸின் 4 கூடுதல் ரன்களுக்கு பந்து பவுண்டரிக்கு சென்றால் இங்கிலாந்து 50 ஓவர் உலக கோப்பையை வெல்ல எந்த பிரச்சனையும் இல்லை? ஆனால் அஸ்வின் கூடுதல் ரன் எடுக்கும்போது உலகம் பைத்தியம் பிடிக்குமா? #வெறியாட்டம். உங்களுக்கு முற்றிலும் பின்னால் இருக்கிறோம் அஸ்வின்'' என்று கூறியுள்ளார்.

Story first published: Thursday, September 30, 2021, 20:47 [IST]
Other articles published on Sep 30, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+