Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லாம் சரி தான்.. ஆனால் கவனமாக இருங்க ரோகித்.. எச்சரிக்கை விடுத்த ஆஸி வீரர்

மெல்போர்ன்: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகிய நிலையில், ரோகித் சர்மா இந்திய அணி கேப்டனாக பொறுப்பேற்றார்.

ரோகித் சர்மா என்ன செய்து விடப்போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவரோ வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் என்று எம்.ஜி.ஆர். MODE க்கு சென்றுவிட்டார்.

தொடர் வெற்றி

தொடர் வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான 3 டி20 போட்டியில் தொடர் வெற்றி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் தொடர் வெற்றி மற்றும் இலங்கைக்கு எதிரான 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டி என தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறார். ரோகித் சர்மா சிறந்த கேப்டனாக இருக்கிறார் என அனைவரும் பாராட்டும் நிலையில், ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் மட்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அழுத்தம்

அழுத்தம்

ரோகித் சர்மாவின் முழு திறன் இந்த தொடர்களை வைத்து எல்லாம் எடைப்போட முடியாது. ரோகித் சர்மாவுக்கு சவாலான தொடர்கள் எல்லாம் பின்னாளில் வருகிறது. இன்னும் ரோகித் சர்மாவுக்கு அழுத்தங்கள் ஏற்பட வேண்டும். அப்போது தான் அந்த தொடரில் அவர் எப்படி விளையாடுகிறார். அழுத்தத்தை எப்படி கையாள்கிறார் என்பது குறித்து அறிய முடியும்.

சவாலான தொடர்

சவாலான தொடர்

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் உள்ளது, ஐபிஎல் முடிந்தவுடன் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 5 டி20 போட்டி மற்றும் ஆஸ்திரலியாவில் நடைபெறும் டி20 உலககோப்பை தொடரில் ரோகித் சர்மாவின் செயல் திறனை காண ஆர்வமாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

Recommended Video

இந்தியாவின் அடுத்த Sehwag.. Rishabh pant-ஐ புகழ்ந்து தள்ளும் DK| Oneindia Tamil
சிக்கல்

சிக்கல்

ரோகித் சர்மா, பலம் குன்றிய இலங்கை, வெஸ்ட் இண்டீஸை எதிர்கொண்டு வீழ்த்திவிட்டார். அனால் உண்மையான சவாலே இனி தான் உள்ளது என்று கிரிக்கெட் விமர்சகர்களும் கூறியுள்ளனர். பயோ பபுளில் ஓய்வின்றி விளையாடுவதால் உடல் காயமின்றி, பழைய பார்முடன் ரோகித் எப்படி விளையாட உள்ளார் என்பதை காண, அவரது ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர்.

Story first published: Friday, March 18, 2022, 17:36 [IST]
Other articles published on Mar 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+