Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னொரு நாடும் போச்சு... பிசிசிஐ எடுக்கும் முயற்சிக்கு தொடர்ந்து சரிவு.. ஐபிஎல் தொடருக்கு சிக்கல்!

மும்பை: ஐபிஎல் தொடரை நடத்துவதற்கு பிசிசிஐ கடும் முயற்சிகள் எடுத்து வரும் நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி கிடைத்துள்ளது.

கொரோனாவால் தடைப்பட்டுள்ள ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்துவதற்கான பணிகளில் பிசிசிஐ தீவிரமாக களமிறங்கியுள்ளது.

இதுவரை 29 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் உள்ளன. இந்த போட்டிகளை நடத்தி முடிக்காவிட்டால் பிசிசிஐ-க்கு ரூ.2500 கோடி வரை நஷ்டம் ஏற்படும் எனக்கூறப்படுகிறது.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

இந்த போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிசிசிஐ நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும் தேதிகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எப்படியும் செப்.18ம் தேதி தொடங்கி ஆக.10ம் தேதி வரை தான் இந்த தொடர்கள் நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டு வீரர்கள்

வெளிநாட்டு வீரர்கள்

ஐபிஎல் தொடர் திட்டமிடப்பட்டுள்ள தேதிகளில் அயல்நாட்டு அணிகள் வெவ்வேறு தொடர்களுக்கு திட்டமிட்டுள்ளது. இதனால் அயல்நாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள் என அந்நாட்டு வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இந்நிலையில் மற்ற நாட்டு அணிகளுடன் பிசிசிஐ பேச்சுவார்த்தையில் ஈடுபட தொடங்கியுள்ளது.

வங்கதேச வீரர்கள்

வங்கதேச வீரர்கள்

இந்நிலையில் வங்கதேச அணி வீரர்கள் ஐபிஎல்-ல் பங்கேற்கமாட்டார்கள் என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசியுள்ள வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹாசன், எங்கள் வீரர்களுக்கு தேசத்திற்காக விளையாட வேண்டிய கடமை உள்ளது. எனவே அவர்களுக்கு அனுமதி ( Non objection Certificate) தர முடியாது. டி20 உலகக்கோப்பை நெருங்கி வருவதால், எங்களுக்கு ஒவ்வொரு சர்வதேச போட்டியும் முக்கியம் என தெரிவித்துள்ளார்.

2 அணிகளுக்கு பின்னடைவு

2 அணிகளுக்கு பின்னடைவு

வங்கதேசத்தை சேர்ந்த ஷகிப் அல் ஹசன், முஸ்விசூர் ரஹ்மான் ஆகிய 2 வீரர்கள் ஐபிஎல்-ல் பங்கேற்பார்கள். ஷகிப் அல் ஹசன் கொல்கத்தா அணியிலும், முஸ்தீவிசூர் ராஜஸ்தான் அணியிலும் தவிர்க்க முடியாத வீரர்களாக உள்ள நிலையில் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் அறிவிப்பு அந்த அணிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Tuesday, June 1, 2021, 17:30 [IST]
Other articles published on Jun 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+