For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மிதாலி ராஜ் விவகாரத்தில் பிசிசிஐ அதிகாரிகள் உள்குத்து!! பிரச்சனை தீர ஒரே வழி தான் இருக்கு

மும்பை : மிதாலி ராஜ் விவகாரம் செய்திகளில் அதிகம் அடிபட்டு வரும் நிலையில், பிசிசிஐ சிறப்பு கூட்டம் கூட்டி இந்த விவகாரத்திற்கு தீர்வு காண உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மகளிர் உலக டி20 அரையிறுதிப் போட்டியில் மூன்று குரூப் சுற்று போட்டிகளில் ஆடி 2 அரைசதங்கள் அடித்து இருந்த மிதாலி ராஜ் சேர்க்கப்படவில்லை.

இதன் பின்னணியில் பயிற்சியாளர் ரமேஷ் பவார் - மிதாலி இடையே இருந்த உரசல் மற்றும் பிசிசிஐ உயரதிகாரி ஒருவரின் தலையீடு ஆகியவை இருப்பதாக செய்திகள் வலம் வந்தன.

மிதாலி ராஜ் கடிதம்

மிதாலி ராஜ் கடிதம்

மிதாலி ராஜ் பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரி மற்றும் மேலாளர் சபா கரீம் ஆகியோருக்கு எழுதியிருந்த மிக விரிவான கடிதம் வெளியே கசிந்தது. அதில் நிர்வாக கமிட்டி உறுப்பினர் டயானா எடுல்ஜி இந்த விவகாரத்தை சரியாக கையாளாமல் ஏமாற்றியதாகவும், பயிற்சியாளர் ரமேஷ் பவார் என்ன செய்தார் என்பதையும் கூறி இருந்தார்.

[வெளிவந்த உண்மை!! என்னை அவமானப்படுத்தினார்.. சிறை வைத்தார்.. மிதாலி ராஜ் கண்ணீர் கடிதம்]

ரமேஷ் பவார் அளித்த விளக்கம்

ரமேஷ் பவார் அளித்த விளக்கம்

அதை தொடர்ந்து ரமேஷ் பவார் அளித்த விளக்கம் என ஒரு விரிவான அறிக்கை செய்திகளில் வெளியானது. அதில் மிதாலி சுயநலமாக நடந்து கொண்டார் எனவும், விரைவாக ரன் குவிக்கும் திறன் இல்லாமல் இருக்கிறார் எனவும் குறை கூறி இருந்தார். மேலும், மிதாலி தன்னை துவக்க நிலையில் களம் இறக்கவில்லை என்பதற்காக பிரச்சனை செய்ததாகவும், அணி நலனை புறக்கணித்ததாகவும் கூறி இருந்தார்.

[மிதாலி ராஜ் மிரட்டினார்.. பிரச்சனை செய்தார்.. சுயநலமாக இருந்தார்.. ரமேஷ் பவார் விளக்கம்!! உண்மையா? ]

பிசிசிஐ உள்ளே அரசியல்

பிசிசிஐ உள்ளே அரசியல்

இப்படி பிசிசிஐ அதிகாரிகளுக்கு அளித்த விளக்கங்கள் எல்லாம் இணையத்தில், செய்திகளில் வெளியானது கண்டு பிசிசிஐ அதிகாரிகள் பலர் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த விவகாரத்தில் பிசிசிஐ அதிகாரிகளுக்கு இடையே உள்ள ஈகோ மற்றும் அரசியல் விளையாடுவது தெளிவாக தெரிகிறது.

ராகுல் ஜோஹ்ரி விவகாரம்

ராகுல் ஜோஹ்ரி விவகாரம்

நிர்வாக கமிட்டி உறுப்பினர் டயானா எடுல்ஜி மற்றும் நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. சமீபத்தில் பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரி மீதான பாலியல் குற்றச்சாட்டு விஷயத்தில் டயானா ராகுலை நீக்குமாறு கூறினார். ஆனால், வினோத் ராய் விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணை முடிவில் எந்த தவறும் செய்யவில்லை என பிரச்சனையை பூசி மெழுகி முடித்து விட்டனர்.

அரசியலுக்கு மத்தியில் மிதாலி விவகாரம்

அரசியலுக்கு மத்தியில் மிதாலி விவகாரம்

டயானா எடுல்ஜி பற்றியும் தன் கடிதத்தில் மிதாலி குறிப்பிட்டுள்ள நிலையில், ராகுல் ஜோஹ்ரி இந்த விவகாரத்தை தன்னை நீக்கும் எண்ணத்தில் இருக்கும் டயானாவை பழி தீர்க்க பயன்படுத்துகிறார் என சிலர் கூறுகிறார்கள். சிலரோ, பல பிரச்சனைகளுக்கும் டயானா தான் காரணம் என கூறுகிறார்கள். இவ்வளவு அரசியலுக்கு மத்தியில் சிக்கிக் கொண்டுள்ளது மிதாலி ராஜ் விவகாரம்.

[அவரிடம் நியாயம் கிடைக்கும்னு பார்த்தேன்.. ஆனா இப்படி பண்ணிட்டாரே!! மனம் வெதும்பிய மிதாலி ராஜ்]

ஒரே வழி இது தான்

ஒரே வழி இது தான்

இந்த நிலையில் சிறப்பு கூட்டம் கூட்டி வெளிப்படையாக இந்த சர்ச்சையை முடித்து வைப்பதே சரியாக இருக்கும் என பிசிசிஐ செயலாளர் முடிவு செய்துள்ளார் என கூறப்படுகிறது. இது மட்டுமே செயலாளரின் அதிகாரத்தில் இருக்கும் ஒரே வழி.

பதவி நீட்டிப்பு கிடையாது

பதவி நீட்டிப்பு கிடையாது

மகளிர் அணி பயிற்சியாளர் ரமேஷ் பவார் தற்காலிகமாகவே அந்த பணியில் அமர வைக்கப்பட்டார். அவரது பதவிக் காலம் நவம்பர் மாத இறுதியுடன் நிறைவு பெறுகிறது. இந்த சர்ச்சைக்கு பின் நிச்சயம் அவருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்க வாய்ப்பில்லை.

மிதாலி ராஜ் ஓய்வு?

மிதாலி ராஜ் ஓய்வு?

மிதாலி ராஜை பொறுத்தவரை அவருக்கு தற்போது 35 வயது ஆகிறது. இதற்கு மேல் அவரால் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே கிரிக்கெட் ஆட முடியும். என்றாலும், இந்த சர்ச்சையில் அவரது உடற்தகுதியும் கேள்விக்கு உள்ளாக்கப் பட்டுள்ளது. எனவே, மிதாலி தனது ஓய்வு முடிவை விரைவில் அறிவிப்பார் எனவும் கூறுகிறார்கள்.

Story first published: Friday, November 30, 2018, 13:38 [IST]
Other articles published on Nov 30, 2018
English summary
BCCI to convene a Special General Meeting to discuss Mithali Raj issue
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+