Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதை கவனிச்சீங்களா? இந்திய பந்துவீச்சில் பிசிசிஐ செய்த மாற்றம்.. நட்சத்திர வீரர் ஷமி இடம்பெறாதது ஏன்?

மும்பை : உலகக்கோப்பை தொடர் நடைபெறும் இந்த காலகட்டத்தில் பிசிசிஐ இந்தியா அணியின் அதிரடி மாற்றங்களை நிகழ்த்தி இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

இதனை அடுத்து பல மாற்றங்கள் அணியில் நிகழும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான முதற்கட்ட வேலைகள் தற்போது தொடங்கப்பட்டிருக்கின்றன.

இந்திய ஒரு நாள் அணியில் சஞ்சு சாம்சன், ருதுராஜ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் டெஸ்ட் அணியில் புஜாரா நீக்கப்பட்டு ருதுராஜ் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.
இதேபோன்று வேகப்பந்து வீச்சிலும் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது சமி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணி இரண்டிலுமே இல்லை. இதனால் சமி நீக்கப்பட்டு விட்டாரா என்று சந்தேகம் இருந்தது.

BCCI Made changes in Fast bowling as Mohammed shami is rested for WI series

ஆனால் சமி தொடர்ந்து விளையாடுவதாலும் ஆசிய கோப்பை, உலக கோப்பை என அடுத்தடுத்து பெரிய தொடர்கள் இருப்பதால் சமிக்கு ஓய்வு வழங்கப்பட்டிருப்பதாக பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இல்லாததால் அவருக்கு மாற்று வீரராக இந்திய ஒரு நாள் அணியில் உம்ரான் மாலிக்கும், முகேஷ் குமாரும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். உம்ரான் மாலிக்கின் வேகத்தை நாம் அனைவருமே பார்த்திருப்போம்.

ஆனால் ஐபிஎல் தொடரில் அவர் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதைப் போன்று முகேஷ் குமார் வேகமாக பந்து வீசக்கூடிய நபராக இருந்தாலும், வெள்ளை நிற கிரிக்கெட்டில் அவர் எவ்வாறு ரன்களை கட்டுப்படுத்துவார் என்று தெரியவில்லை. இதேபோன்று இந்திய அணியில் இடது கை வேகப் பந்துவீச்சாளர் தேவை என்பதற்காக ஜெய்தேவ் உனாட்கட் ஒரு நாள் அணியிலும் டெஸ்ட் அணியிலும் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

இது பிசிசிஐ செய்த பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் முஹமது சிராஜ், உனாட்கட், உம்ரான் மாலிக் ஆகியோர் ஒரு நாள் அணியில் வேகப்பந்து வீச்சாளராக செயல்படுவார்கள். டெஸ்ட் அணியை பொறுத்தவரை உமேஷ் யாதவ் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு பதிலாக நவதீப் சைனி சேர்க்கப்பட்டிருக்கிறார்.இதேபோன்று ஆல்ரவுண்டராக ஷர்துல் தாக்கூருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

டெஸ்ட் அணியை பொறுத்தவரை முகமது சிராஜ் ,உனாட்கட்டுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இடது கை வேகப்பந்து வீச்சாளர் தேவை என்பதை உணர்ந்த பிசிசிஐ தற்போது ஜெய்தேவ் உனாட்கட்டும், ஒருநாள் அணியில் வேகத்திற்காக உம்ரான் மாலிக்கையும் பிசிசி ஐ தேர்வு செய்துள்ளது. எனினும் மற்றொரு இடது கை வேகப்பந்துவீச்சாளர் ஆர்ஸ்தீப் சிங், சிஎஸ்கே வீரர் தீபக்சாகர் ஆகியோருக்கு ஒரு நாள் அணியில் பிசிசிஐ வாய்ப்பு வழங்கவில்லை.

Story first published: Friday, June 23, 2023, 17:42 [IST]
Other articles published on Jun 23, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+