Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலியர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் கவனிப்பு? மற்ற வீரர்களுக்கு இல்லையா?பிசிசிஐ மீது கிளம்பிய புகார்

ஐபிஎல்-ல் பங்கேற்ற மற்ற அயல்நாட்டு வீரர்களுக்கு செய்துகொடுக்காத ஒரு வசதியை ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மட்டும் பிசிசிஐ செய்துகொடுத்துள்ளது.

ஐ.பி.எல் தொடர் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென பயோ-பபுள் உடைந்து வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் கடந்த 4-ந்தேதி ஐ.பி.எல். போட்டிகள் உடனடியாக ஒத்திவைக்கப்பட்டன.

முதலில் கொல்கத்தா அணி வீரர் வருண் சக்கரவர்த்திக்கு உறுதியான கொரோனா பின்னர் டெல்லி, ஐதராபாத், சிஎஸ்கே அணிகளிலும் தாக்கியது.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

இதனையடுத்து ஐ.பி.எல் தொடரில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்களை அவர்களது நாட்டுக்கு பிசிசிஐ பத்திரமாக அனுப்பி வைத்தது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேச வீரர்கள் தங்கள் நாடுகளுக்கு உடனடியாக திரும்பினர். ஆனால் இந்திய விமானங்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய மே 15 வரை அந்நாட்டு அரசு தடைவிதித்ததால் தாய் நாடு செல்லமுடியாமல் தவித்தனர்.

மாலத்தீவு

மாலத்தீவு

பின்னர் வீரர்கள், வர்ணனையாளர்கள் என 38 ஆஸ்திரேலியர்கள் தனி விமானம் மூலம் மாலத்தீவுக்கு அனுப்பி வைத்தது பிசிசிஐ. அங்கு அவர்கள் அங்கு மே 15ம் தேதி வரை தங்கவைக்கப்பட்டு பின்னர் ஆஸ்திரேலிய அரசின் அனுமதி கிடைத்தவுடன் நாட்டிற்கு கிளம்ப முடிவு செய்தனர்.

 சொன்னதை செய்த பிசிசிஐ

சொன்னதை செய்த பிசிசிஐ

அந்தவகையில் நேற்று ஆஸ்திரேலிய வீரர்கள், ஊழியர்கள் என 38 பேரையும் தனி விமானம் மூலம் தாய் நாட்டிற்கு பிசிசிஐ அனுப்பி வைத்தது. கொரோனா பாதித்து சென்னையில் சிகிச்சை பெற்று வந்த மைக்கேல் ஹசி பயணிகள் விமான மூலம் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர்கள் சிட்னியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

குவாரண்டைன் செலவு

குவாரண்டைன் செலவு

இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்பிய பின்னரும் அங்கு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஹோட்டல் செலவுகளை பிசிசிஐ தான் கொடுத்து வருகிறது என தெரியவந்துள்ளது. இதனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை அதிகாரி நிக் ஹாக்லே தெரியப்படுத்தியுள்ளார். மேலும் பேசிய அவர், பிசிசிஐ உறுதியளித்தபடியே வீரர்களை கொண்டு வந்து சேர்த்துவிட்டது. அவர்களின் பணியை சரியாக செய்து கொடுத்தது பாராட்டக்குறியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய சர்ச்சை

புதிய சர்ச்சை

இதற்கு முன்னர் நாடு திரும்பிய இங்கிலாந்து, வங்கதேசம், தென்னாப்பிரிக்க உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வீரர்களை சொந்த நாட்டிற்கு அனுப்பிவைத்ததுடன் பிசிசிஐ விலகி விட்டதாகவும், அவர்களின் நாட்டில் குவாரண்டைன் இருக்கும் ஹோட்டல் பில்களை வீரர்கள் தங்கள் சொந்த செலவிலும், அல்லது அந்நாட்டு கிரிக்கெட் வாரிய செலவிலும் செலுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மட்டும் அவர்கள் நாடு திரும்பிய பிறகும் கூட ஹோட்டல் செலவுகளை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

Story first published: Tuesday, May 18, 2021, 20:58 [IST]
Other articles published on May 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+