
ஐபிஎல் தொடர்
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறையாமல் இருப்பதால் இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை பிசிசிஐ-ன் அடுத்த தேர்வாக உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் வரும் மே 29ம் தேதி நடக்கவுள்ளது. அதில் ஐபிஎல் தொடர் எங்கு நடத்துவது என்பது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகம்
இந்நிலையில் ஐபிஎல்-ஐ மீண்டும் நடத்துவதற்கு ஐக்கிய அரபு அமீரகத்தை தான் பிசிசிஐ தேர்வு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஐபிஎல்- இதுவரை 29 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளன. மீதம் 31 போட்டிகள் உள்ளன. இவற்றை செப்டம்பர் - அக்டோபர் மாத இடையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய திட்டம்
இந்திய அணி அடுத்ததாக வரும் மே 18ல் நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுகிறது. அதன் பிறகு இங்கிலாந்துடன் ஆக.4 முதல் செப்.14 வரை 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதனால் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 15ம் தேதி கால இடைவெளியில் ஐபிஎல் தொடர் நடத்தலாம்.

அட்டவணை திட்டம்
இந்த 30 நாட்களில் 31 நாட்கள் நடத்தப்பட வேண்டும். இதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் அமீரகத்திற்கு செல்ல ஒரு நாள் தேவைப்படும். பின்னர் ப்ளே ஆஃப் போட்டிகளுக்கு 5 நாட்கள் தேவைப்படும். அதன் பின்னர் 24 நாட்களில் 27 போட்டிகளை நடத்த வேண்டியிருக்கும். இந்த 24 நாட்களில் சனி மற்றும் ஞாயிறு என 8 நாட்கள் உள்ளன. அதில் 'டபுள் எட்டர்' போட்டிகள் நடத்தினால் 16 போட்டிகள் நிறைவடையும். அப்படி சரியாக நடத்திவிட்டால் மீதம் உள்ள 19 நாட்களில் 11 போட்டிகளை நடத்தினால் போது. ஒரு வாரமே தேவைக்கு அதிகமாக உள்ளது எனத்தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகக்கோப்பை
ஒரு வேளை ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றால் அக்டோபர் மாதத்தில் நிறைவடையும். இதனால் டி20 உலகக்கோப்பை தொடரும் அதே மாதத்தில் அங்கேயே நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இவை அனைத்து வரும் மே 29ம் தேதி மற்றும் ஜூன் 1ம் தேதி நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் உறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











