வருங்காலத்தில் அமெரிக்காவில் ஐபிஎல்..? மும்பை இந்தியன்சுக்கு பிசிசிஐ சொன்னது என்ன..?
மும்பை: ஐபிஎல் தொடரை அமெரிக்காவில் பிரபலப்படுத்தலாம் என்ற மும்பை இந்தியன்ஸின் யோசனையை பிசிசிஐ நிராகரித்திருக்கிறது.
உலக கோப்பை, ஆசிய கோப்பை உள்ளிட்ட முக்கிய தொடர்களை காட்டிலும் அதிக மவுசு கொண்டதாக இருக்கிறது ஐபிஎல் தொடர். இந்தியாவில் மட்டுமே இந்த தொடர் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வெற்றிக்கரமாக நடத்தப் படும் இந்த தொடருக்கென ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
பிசிசிஐ நடத்தும் இந்தத் தொடரில் 8 அணிகள் விளையாடி வருகின்றன. 2011ல் அதிகபட்சமாக 10 அணிகள் பங்கேற்றன. 2012 மற்றும் 2013ம் ஆண்டில் 9 அணிகள் கலந்து கொண்டன. தற்போது நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 8 அணிகள் தான் பங்கேற்றன.

உரிமையாளர்கள் ஆலோசனை
இந்நிலையில், ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் கடந்த வாரம் லண்டனில் ஆலோசனை நடத்தி இருக்கின்றனர். அதில் அடுத்தாண்டு மேலும் சில அணிகளை சேர்க்கலாம் என்று பேசப்பட்டதாக தெரிகிறது. பல முன்னணி தொழில் நிறுவனங்கள் தங்களுக்கென ஒரு அணி வேண்டும் என்றும் கூறி இருக்கின்றன.

வருகிறது புது அணிகள்
அதானி குழுமம் சார்பில் அகமதாபாத்தில் இருந்து ஒரு அணியும், ஆர்பிஜி நிறுவனம் சார்பில் புனேவில் இருந்து ஒரு அணியும், டாடா குழுமம் சார்பில் ராஞ்சி மற்றும் ஜாம்ஷெட்பூரில் இருந்து ஒரு அணியும் உருவாக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், சில கார்ப்பரேட் நிறுவனங்களும் தங்கள் தரப்பில் இருந்து அணிகள் வருவதற்காக பேசியுள்ளனர்.

யோசனை
இந் நிலையில் அமெரிக்காவில் ஐபிஎல் தொடரில் நடத்தி அங்கு கிரிக்கெட்டை பிரபலப் படுத்தலாம் என்று மும்பை இந்தியன்ஸ் அணி பிசிசிஐயிடம் யோசனை தெரிவித்திருந்தது. அதற்கு பிசிசிஐ தற்போது பதிலளித்திருக்கிறது. அதில் கூறி இருப்பதாவது:

ஐபிஎல் மார்க்கெட்
மும்பை இந்தியன்ஸ் அணி பிசிசிஐயில் ஒரு அங்கமாக இருப்பதால் அவர்களின் கேள்விக்கும், அறிவுறுத்தலுக்கு மதிப்பளிக்கிறோம். மும்பை இந்தியன்ஸ் அணி எங்களுக்கு ஒரு யோசனை வழங்கி இருந்தது. அதாவது ஐபிஎல் தொடரில் ஒரு சில போட்டிகளை அமெரிக்காவில் நடத்தினால், அங்கு புதிய ஐபிஎல் மார்க்கெட்டை வளர்க்கலாம் என்றும், கிரிக்கெட்டிற்கும் இது உகந்ததாக அமையும் என்றும் கூறியிருந்தனர்.

சிக்கல்கள் உள்ளன
ஆனால் இந்த ஐடியாவை உடனடியாக செயல்படுத்த முடியாது. ஏன் என்றால் அதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. பொருளாதார ரீதியாக அங்கு லாபம் இருந்தால் மட்டுமே ஐபிஎல்லை அங்கு நடத்த முடியும் என்று பிசிசிஐ பதிலளித்து உள்ளது.


Click it and Unblock the Notifications