Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"பிரிச்சுப் போடு பிரிச்சுப் போடு".. டைம்டேபிளை மாத்து.. அதிரடியில் குதித்த பிசிசிஐ.. வந்தது புதிய அப்டேட்!

மும்பை: ஐபிஎல் தொடரின் 2வது பகுதி அட்டவணையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

கொரோனாவால் தடைபட்டுள்ள ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்த பிசிசிஐ தீவிரமாக களமிறங்கி வருகிறது.

இதுவரை 29 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் 31 போட்டிகள் நடத்தப்பட வேண்டியுள்ளது.

ஐபிஎல் 2வது பாதி

ஐபிஎல் 2வது பாதி

மீதமுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே 29ம் தேதி நடைபெற்ற பிசிசிஐ ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. எனினும் போட்டிகளுக்காக அட்டவணை எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 டபுள் ஹெட்டர்ஸ் எண்ணிக்கை

டபுள் ஹெட்டர்ஸ் எண்ணிக்கை

இந்நிலையில் அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடத்துவதற்காக பிசிசிஐ அட்டவணையில் மாற்றம் செய்யவுள்ளது. ஐபிஎல் போட்டிகள் செப்.18ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறும் எனக்கூறப்படுகிறது. ஐபிஎல் தொடர் தடைபடாமல் இருந்திருந்தால் தற்போது 6 டபுள் ஹெட்டர்ஸ் மட்டுமே இருந்திருக்கும். ஆனால் தற்போது 8 டபுள் ஹெட்டர்ஸை ஏற்படுத்த திட்டம் போடப்பட்டு வருகிறது.

டி20 உலகக்கோப்பை

டி20 உலகக்கோப்பை

31 போட்டிகளை 25 நாட்களில் நடத்தி முடிக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில் 8 ஹெட்டர்ஸ் மற்றும் 15 தனி போட்டிகள் நடைபெறவுள்ளன. இது ஒருபுறம் இருக்க அக்டோபர் மாதத்தில் டி20 உலகக்கோப்பை பணிகள் தொடங்கிவிடும் என்பதால் 10 டபுள் ஹெட்டர்ஸ்கள் நடத்தவும் திட்டம் போடப்பட்டு வருகிறது.

 ஒரே ஒரு மைதானம்

ஒரே ஒரு மைதானம்

அமீரகத்தில் ஷார்ஜா, அபுதாபி, துபாய் என 3 மைதானங்கள் உள்ளன. டி20 உலகக்கோப்பை அமீரகத்தில் நடத்த ஒருவேளை முடிவு செய்யப்பட்டால், அக்டோபர் 1ம் தேதியே அனைத்து மைதானங்களையும் அதற்கு தருவதாக ஐசிசிக்கு அந்நாட்டு அரசு வாக்குறுதி அளித்துள்ளது. இதனால் 2 போட்டிகளை அதற்கு கொடுத்து விட்டு, ஐபிஎல் தொடரின் கடைசி சில போட்டிகள் மற்றும் நாக் அவுட் போட்டிகள் ஒரே மைதானத்தில் நடத்த வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது.

Story first published: Friday, June 4, 2021, 21:07 [IST]
Other articles published on Jun 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+