Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"இப்போவே யோசிக்க முடியாது.. டைம் வேணும்".. உலகக் கோப்பை டி20 - பிசிசிஐ "சாமர்த்திய" மூவ்

மும்பை: உலகக் கோப்பை டி20 தொடரை நடத்துவது குறித்து ஆராய இன்னும் கூடுதல் கால அவகாசம் தேவை என்று எஸ்ஜிஎம் மீட்டிங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

ஒருவழியாக, கிரிக்கெட் ரசிகர்களுக்கு எனர்ஜியான செய்தி கிடைத்துள்ளது. ஆம்! 31 ஆட்டங்கள் மீதம் வைத்து நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் செப்டம்பர் மாதம் அமீரகத்தில் நடத்தப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

செப்டம்பர் டூ அக்டோபர் வரை மீதமுள்ள 31 போட்டிகளையும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாம். ஆனால், 10 போட்டிகள் double headers-ஆக, அதாவது ஒரே நாளில் இரண்டு போட்டிகளாக நடத்தப்படுமா என்பது குறித்த முழுமையான விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை.

அமீரகத்திலா?

அமீரகத்திலா?

அதேசமயம், உலகக் கோப்பை டி20 தொடர் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கடந்த ஆண்டே நடைபெறவேண்டிய டி20 தொடர், கொரோனா காரணமாக, இந்தாண்டு ஜூன் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டது. இப்போது, மீண்டும் இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கொத்து கொத்தாக மக்களை ஆட்டுவித்துக் கொண்டிருக்க, அமீரகத்தில் தொடரை நடத்தலாம் என்று கடந்த சில வாரங்களாக செய்திகள் வெளியாகின.

இங்கிலாந்து சீரிஸுக்கு பிறகு

இங்கிலாந்து சீரிஸுக்கு பிறகு

அதுவும், இந்தியா - இங்கிலாந்து தொடர் முடிந்த பிறகு, அமீரகத்தில் செப்டம்பர் மாதம் உலகக் கோப்பையை நடத்த வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், அதுகுறித்த எந்தவித அப்டேட்டும் வெளியாகவில்லை. சில செய்தி அறிக்கையில், இங்கிலாந்து தொடர் முடிந்த பிறகு, உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட்டு, அதைத் தொடர்ந்து அப்படியே அமீரகத்தில் ஐபிஎல் தொடரையும் நடத்த வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டன.

தக்க வைக்க வாய்ப்பு

தக்க வைக்க வாய்ப்பு

இதற்கு காரணம், உலகக் கோப்பையில் கலந்து கொள்ள வரும் வெளிநாட்டு வீரர்களில் முடிந்த அளவு சில வீரர்களை ஐபிஎல் தொடருக்கு தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. எனினும், அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

கால அவகாசம்

கால அவகாசம்

இந்த சூழலில், இன்று நடைபெற்ற எஸ்ஜிஎம் மீட்டிங்கில், உலகக் கோப்பை டி20 தொடரை நடத்துவது குறித்து சாத்தியக்கூறுகளை ஆராய மேலும் எங்களுக்கு கால அவகாசம் தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்தியாவில் நிலவும் மோசமான சூழலை கருத்தில் கொண்டு, மீண்டும் சில நாட்கள் கழித்து, இதுகுறித்து முடிவு செய்யலாம் என மீட்டிங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜெய் ஷா தனது அறிக்கையில், " டி20 உலகக் கோப்பை நடத்துவதற்கு ஏதுவான நேரம் குறித்து முடிவெடுக்க கூடுதல் கால அவகாசம் ஐசிசியிடம் கேட்கப்பட உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால், உலகக் கோப்பையின் நிலைமை மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.

Story first published: Saturday, May 29, 2021, 15:06 [IST]
Other articles published on May 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+