Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பறிபோகும் ஐபிஎல் கனவு... அமீரக மைதானங்களை அதிகளவில் கைப்பற்றும் பாகிஸ்தான்.. முழு விவரம்!

மும்பை: ஐபிஎல்- தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் எனக்கூறப்பட்டு வரும் நிலையில் அதில் பெரும் சிக்கல்கள் நிறைந்துள்ளது.

கொரோனா காரணமாக தடைபட்டுள்ள ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்த பிசிசிஐ தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

இதுவரை 29 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் நடத்தப்பட வேண்டும். இவை நடத்தப்படாவிட்டால் பிசிசிஐ-க்கு ரூ. 2500 கோடி வரை நஷ்டம் ஏற்படும் எனக்கூறப்படுகிறது.

 அமீரகம்

அமீரகம்

இந்திய அணி அடுத்ததாக ஜூலை 18ம் தேதி நியூசிலாந்துடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆடுகிறது. அதன்பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆக.4 முதல் செப்.14 வரை 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதனால் செப்.15ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஆனால் அதில் சிக்கல் உள்ளது.

 பிஎஸ்எல் தொடர்

பிஎஸ்எல் தொடர்

அமீரகத்தில் அபுதாபி, துபாய், சார்ஜா ஆகிய நகரங்களில் 3 மைதானங்கள் மட்டுமே உள்ளன. வரவிருக்கும் நாட்களில் இங்கு பல்வேறு தொடர்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள பாகிஸ்தானின் பிஎஸ்எல் தொடர் அபுதாபியில் ஜூன் மாதம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த அட்டவணையும் வெளியாகவில்லை. மொத்தம் 20 போட்டிகள் உள்ளதால் 20 நாட்களாவது மைதானம் தேவைப்படும்.

பாகிஸ்தானின் ப்ளான்

பாகிஸ்தானின் ப்ளான்

இதன் பின்னர் செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு குறைந்தது ஒரு வார காலம் மைதானம் தேவைப்படும். இதனை தொடர்ந்து செப்டம்பர் - அக்டோபர் மாத இடைவெளியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக குறைந்தது 15 நாட்கள் மைதானங்கள் பயன்படுத்தப்படும். அதே போல ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையே 3 டி20 போட்டிகளை அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை தொடர்

உலகக்கோப்பை தொடர்

இது எல்லாம் தவிர்த்து உலகக்கோப்பை தொடர் பிசிசிஐ-க்கு ஒரு தலைவலியாக உள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக உள்ளதால், டி20 உலகக்கோப்பை அமீரகத்தில் நடத்த அதிக வாய்ப்புகள் உள்ளது. ஒருவேளை அமீரகத்தில் நடத்துவது உறுதியானால் அக்டோபர் 1ம் தேதி முதல் அமீரகத்தின் அனைத்து மைதானங்களையும் அதற்கு தருவதாக ஐசிசிக்கு அந்நாட்டு அரசு வாக்குறுதி கொடுத்துள்ளது. இதனால் பிசிசிஐ-க்கு செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் ஐபிஎல்-ஐ நடத்துவது பெரும் சிக்கலாக உள்ளது.

Story first published: Tuesday, May 25, 2021, 19:07 [IST]
Other articles published on May 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+