Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சர்பிராஸ் கான், ஹனுமா விஹாரிக்கு மீண்டும் வாய்ப்பு மறுப்பு.. முதுகில் குத்திய BCCI.. எல்லாம் போச்சு

மும்பை : வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியின் இளம் நட்சத்திர வீரர்கள் சப்ராஸ்கான் ஹனுமா விஹாரிக்கு பிசிசிஐ மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாதது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி ஆட்டத்தில் தொடர்ந்து இந்திய அணி இரண்டு முறை தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் காரணமாக டெஸ்ட் அணியில் அதிரடி மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்பட்டது.

சீனியர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு ஜூனியர் வீரர்களான ஹனுமா விகாரி சர்பிராஸ் கான் அபிமன்யு ஈஸ்வரன் உள்ளிட்ட ரஞ்சி போட்டியில் சிறப்பாக விளையாடியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிசிசிஐயின் தற்காலிக தேர்வு குழு தலைவர் சிவ்சுந்தர் ஒரு டிவிஸ்டை வைத்துவிட்டார். யாரும் எதிர்பாராத வகையில் முதல் கட்டமாக நட்சத்திர வீரர் புஜாரவை டெஸ்ட் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்.

Blunder Mistake by bcci selection committee for not including hanuma vihari and sarfaraz

ஆனால் அந்த இடத்திற்கு நியாயப்படி ஹனுமா விகாரி வந்திருக்க வேண்டும். ஆனால் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி பெயர் பெற்ற ருதுராஜ் கெய்க்வாட்டை பிசிசிஐ தேர்வு குழு அறிவித்திருக்கிறது. ருதுராஜ் திறமையான வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவர் சமீப காலமாக ஐபிஎல், விஜய் ஹசாரே கோப்பையில் தான் சிறப்பாக விளையாடி இருக்கிறார். ஆனால் ஹனுமா விகாரி தன்னுடைய திறமையை ஆஸ்திரேலிய மண்ணில் நிரூபித்திருக்கிறார்.

டெஸ்ட் போட்டிக்கு நிதானமாக விளையாடும் வீரருக்கு முன்னுரிமை கொடுத்திருக்க வேண்டும். அதன்படி ஹனுமா விகாரி சரியான தேர்வாக இருந்திருப்பார். இதேபோன்று ரஞ்சி கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்திருக்கும் சர்பிஃராஸ் காணும் இம்முறையும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. டான் பிராட்மனுக்கு பிறகு அதிக சராசரி வைத்திருக்கும் வீரராக பார்க்கப்படும் சர்பிராஸ்கான் பொறுமையாகவும் விளையாட தெரியும்.

இதனால் அவருக்கு நடுவரசையில் வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் பிசிசிஐ தேர்வுக்குழு அவரையும் நிராகரித்திருக்கிறது. இதேபோன்று ரஞ்சி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் தொடக்க வீரர் அபிமன்யூ ஈஸ்வரனுக்கும் தேர்வு குழு வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் ரஞ்சி கிரிக்கெட் விட ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் தான் வாய்ப்பு தரப்படுகிறதா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Story first published: Friday, June 23, 2023, 16:57 [IST]
Other articles published on Jun 23, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+