Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓவர்நைட்ல டபுள் செஞ்சுரியா? யோசிக்காம இவரை உடனே இந்திய அணியில் சேருங்க.. ஆஸி வீரர் அதிரடி!

மும்பை : இந்திய அணியில் இளம் வீரர் ஒருவரை சேர்த்துக் கொள்ளுங்கள் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் பரிந்துரை செய்துள்ளார்.

சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான முதல் தர போட்டியில், ஷுப்மன் கில் அசத்தலாக ஆடி இருந்தார்.

சிறந்த பார்மில் இருக்கும் அவருக்கு பாதி தொடரிலேயே இந்திய அணியில் இடம் கொடுக்க வேண்டும். அது இந்திய அணியில் இருக்கும் முக்கிய பிரச்சனை ஒன்றை தீர்க்கும் என பிராட் ஹாக் கூறி உள்ளார்.

அணியில் இடம் இல்லை

அணியில் இடம் இல்லை

ஐபிஎல் தொடர் மற்றும் இந்தியா ஏ தொடர்களில் சிறப்பாக ரன் குவித்த ஷுப்மன் கில் இந்திய அணியில் நிச்சயம் இடம் பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் 19 வயதே ஆன அவருக்கு இடம் அளிக்கப்படவில்லை.

ஷுப்மன் கில் சோகம்

ஷுப்மன் கில் சோகம்

இதனால், கடும் வருத்தத்தில் இருந்தார் ஷுப்மன் கில். தன் ஏமாற்றத்தை பேட்டிகளில் வெளிப்படுத்தி இருந்தார். தான் தொடர்ந்து சிறப்பாக ஆடுவேன் என கூறி இருந்தார். தற்போது அதை செயலிலும் காட்டி அசத்தி இருக்கிறார்.

இரட்டை சதம் அடித்தார்

இரட்டை சதம் அடித்தார்

வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான முதல் தர போட்டியில் ஷுப்மன் கில் இரட்டை சதம் அடித்து தெறிக்கவிட்டார். அதுவும் 248 பந்துகளில் 204 ரன்கள் குவித்து டெஸ்ட் போட்டியிலும் தன்னால் வேகமாக ரன் குவிக்க முடியும் என காட்டினார்.

பிராட் ஹாக் பரிந்துரை

பிராட் ஹாக் பரிந்துரை

இந்த நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் இவரை பாராட்டி இருந்தார். ஷுப்மன் கில் ஒரே ராத்திரியில் இரட்டை சதம் அடித்துள்ளார். இந்திய ஒருநாள் அணியில் தாமதமானாலும் இவரை சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறி உள்ளார்.

மிடில் ஆர்டர் சிக்கல்

மிடில் ஆர்டர் சிக்கல்

மேலும், அது இந்திய அணியில் நிலவும் மிடில் ஆர்டர் பிரச்சனையை தீர்க்கும் என்றும் கூறி உள்ளார். இந்திய அணியில் தற்போது தோனி, தினேஷ் கார்த்திக் இல்லாத நிலையில், மிடில் ஆர்டரில் இளம் வீரர்களை ஆட வைக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாய்ப்பு கிடைக்குமா?

வாய்ப்பு கிடைக்குமா?

ஆனால், ஷுப்மன் கில்லுக்கு நடப்பு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது. அணியில் இருக்கும் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் வாய்ப்பு கிடைக்கலாம் என்ற நிலையே உள்ளது.

அடுத்த தொடர் தான்

அடுத்த தொடர் தான்

இந்தியா அடுத்து சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. அந்த தொடரில் ஷுப்மன் கில் நிச்சயம் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கலாம்.

Story first published: Saturday, August 10, 2019, 14:57 [IST]
Other articles published on Aug 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+