Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை இந்தியன்சுக்கு தன்னம்பிக்கை இல்லை... அவங்கள பத்தி கவலையா இருக்கு... லாரா வருத்தம்

டெல்லி : ஐபிஎல் 2021 தொடரின் 5 போட்டிகளை சென்னை சிதம்பரம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடி முடித்துள்ளது.

Recommended Video

Anil Kumble விளக்கம்! முதல் 4 போட்டிகளில் Ravi Bishnoi ஏன் களமிறங்கல? | Oneindia Tamil

5 போட்டிகளில் இதுவரை விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி கொண்டுள்ளது.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி குறித்து மிகுந்த கவலையாக உள்ளதாக மேற்கிந்திய தீவுகளின் ஜாம்பவான் வருத்தம் தெரிவித்துள்ளார்.

24வது போட்டி

24வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 24வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதுவரை சென்னையில் ஆடி முடித்துள்ள 5 போட்டிகளில் 2ல் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. நடப்பு சாம்பியனான அந்த அணி தற்போது புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

சாதகமாக அமையாத பிட்ச்

சாதகமாக அமையாத பிட்ச்

சென்னையில் 5 போட்டிகளை விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, அந்த பிட்ச் சாதகமாக அமையவில்லை. ஸ்பின்னர்களுக்கு சாதகமான அந்த பிட்ச்சில் தன்னை நிரூபிக்க அந்த அணி தவறியுள்ளது. இந்நிலையில் இன்று ராஜஸ்தான் அணியுடன் மோதவுள்ள போட்டி டெல்லியின் பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஸ்பின்னர்களுக்கு சாதகமான பிட்ச்

ஸ்பின்னர்களுக்கு சாதகமான பிட்ச்

அடுத்த 4 போட்டிகளை அந்த இடத்தில் ஆடி முடித்தவுடன் அடுத்ததாக அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் அடுத்த கட்ட போட்டிகளை ஆடவுள்ளது மும்பை இந்தியன்ஸ். இந்நிலையில் பெரோஷா கோட்லா மைதானமும் ஸ்பின்னர்களுக்கு சாதகமான பிட்ச் என்பதால் மும்பை இந்தியன்ஸ் இதிலும் சிறப்பை வெளிப்படுத்துமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும்

தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும்

இந்நிலையில் தொடர்ந்து வெற்றி பெற்றுவரும் ஆர்சிபி போல பிட்ச்களை தன்னம்பிக்கையுடன் எதிர் கொள்ள வேண்டும் என்றும் பிட்ச்களை பிரச்சினையாக பார்க்கக்கூடாது என்றும் மேற்கிந்திய ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். பிட்ச்களை ஒரு பிரச்சினையாக கூறிவரும் மும்பை இந்தியன்ஸ் அணி குறித்து தான்மிகவும் கவலை கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிறப்பாக எதிர்கொள்ள வேண்டும்

சிறப்பாக எதிர்கொள்ள வேண்டும்

ஒரு பிட்சில் இருந்து மற்றொரு பிட்சில் விளையாடும் போது அணிகள் சிரமங்களை சந்திக்க வேண்டியது வரும் என்று கூறியுள்ள அவர், தற்போது புதிய பிட்ச்சில் விளையாடவுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, அதை எவ்வாறு எதிர்கொள்வார்கள் என்ற கவலையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

Story first published: Thursday, April 29, 2021, 10:27 [IST]
Other articles published on Apr 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+