For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

24 ரன்களில் 5 விக்கெட் இழந்த இலங்கை.. குல்தீப், சிராஜ் அபார பந்துவீச்சு.. 215 ரன்களில் சுருண்டது

கொல்கத்தா : இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 215 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதிக ரன்கள் எடுத்து, பந்தவீச்சு மூலம் நெருக்கடி அளிக்க கேப்டன் ஷனாகா திட்டமிட்டார். ஆனால், இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு, இலங்கைக்கு நெருக்கடி அளித்தனர்.

இலங்கை அணியிலிருந்து நிசாங்கா நீக்கப்பட்டு, அறிமுக வீரராக நுவானிந்து பெர்னான்டோ சேர்க்கப்பட்டார்.

பார்ட்னர்ஷிப் பிரேக்கர்

பார்ட்னர்ஷிப் பிரேக்கர்

தொடக்க வீரர் அவிஸ்கா பெர்னான்டோ, பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தார். இந்த நிலையில், முகமது சிராஜ் ஆட்டத்தின் 6வது ஓவரில் அவிஸ்கா பெர்னான்டோ 20 ரன்களில் போல்ட் ஆனார். இதனையடுத்து 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த குசேல் மெண்டிஸ், நுவானிந்து உடன் ஜோடி சேர்ந்து பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தார்.

பிளாக்பஸ்டர் முடிவு

பிளாக்பஸ்டர் முடிவு

இந்த ஜோடி நிதானமாக விளையாடி எந்த நெருக்கடியும் இல்லாமல் இருந்தனர். இதன் காரணமாக இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து, சுழற்பந்துவீச்சை வைத்து இலஙகைக்கு நெருக்கடி அளிக்கும் ரோகித் சர்மாவின் முடிவு பொங்கல் பிளாக்பஸ்டர்களாக அமைந்தது.

அடுத்தடுத்து விக்கெட்

அடுத்தடுத்து விக்கெட்

குல்தீப் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் விக்கெட் வீழ்ந்தது. சிறப்பாக விளையாடிய குசேல் மெண்டிஸ் 34 ரன்களுக்கு எல்பிடபிள்யூ ஆனார். இதனைத் தொடர்ந்து அக்சர் பட்டேலுக்கு ரோகித் சர்மா ஓவர் கொடுக்க, அவர் தனது 2வது பந்திலேயே தனஞ்செய்ய டி சில்வாவை போல்ட் ஆக்கினார். இதன் காரணமாக மூன்று பந்து இடைவெளியில் 2 விக்கெட்டுகள் வீழ்ந்தது.

வேகப்பந்துவீச்சு அபாரம்

வேகப்பந்துவீச்சு அபாரம்

அறிமுக வீரராக களமிறங்கிய நுவானிந்து அரைசதம் எடுத்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். அசலங்காவும் குல்தீப்பிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க. ஷனாகா போல்ட் ஆனார். இலங்கை அணி 126 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இதனையடுத்து அதிரடியாக விளையாடிய ஹசரங்கா, கருணரத்னே விக்கெட்டை உம்ரான் மாலிக் வீழ்த்தினார். இறுதியில் முகமது சிராஜ் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்த இலங்கை அணி 39.4 வது ஓவரில் 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Story first published: Thursday, January 12, 2023, 17:17 [IST]
Other articles published on Jan 12, 2023
English summary
Brilliant bowling by Indian players restricted srilanka 215 runs 24 ரன்களில் 5 விக்கெட் இழந்த இலங்கை.. குல்தீப், சிராஜ் அபார பந்துவீச்சு.. 215 ரன்களில் சுருண்டது
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+