Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ராஜஸ்தான் அணியோட ரன்களை சுருக்கிய மும்பை பௌலர்... அதிரடி புது மாப்பிள்ளை!

டெல்லி : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களை அடித்திருந்தது.

ராஜஸ்தான் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி பௌலர் சிறப்பாக பந்து வீசினார்.

ராஜஸ்தான் அணி பேட்டிங்

ராஜஸ்தான் அணி பேட்டிங்

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்த நிலையில் முதலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்தது.

சஹர் சிறப்பு

சஹர் சிறப்பு

அந்த அணியின் துவக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் அதிரடியாக ஆடிய நிலையில், ராகுல் சஹர் அடுத்தடுத்து இருவரின் விக்கெட்டுகளையும் விழ்த்தினார். இருவரும் முறையே 41 மற்றும் 32 ரன்களில் அவுட்டாகினர்.

172 இலக்கு

172 இலக்கு

தொடர்ந்து பும்ரா மற்றும் ட்ரெண்ட் போல்ட் முறையே ஷிவம் தூபே மற்றும் சஞ்சு சாம்சன் விக்கெட்டுளை வீழ்த்தினர். ஆயினும் அவர்களும் அவுட் ஆவதற்கு முன்னதாக 35 மற்றும் 42 ரன்களை அடித்துவிட்டுதான் பெவிலியனுக்கு திரும்பினர். இதையடுத்து அந்த அணியின் ஸ்கோர் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171ஆக இருந்தது.

வேகப்பந்து வீச்சுக்கு சாதகம்

வேகப்பந்து வீச்சுக்கு சாதகம்

சென்னையில் ஆடிய 5 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருந்தார் பும்ரா. ஆர்சிபிக்கு எதிராக 2 விக்கெட்டுகளையும் அடுத்த 4 போட்டிகளில் 2 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தினார். அந்த பிட்ச் ஸ்லோ பந்துகளுக்கு சாதகமாக இருந்த நிலையில், தற்போது டெல்லி மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

4 ஓவர்களில் 15 ரன்கள்

4 ஓவர்களில் 15 ரன்கள்

இந்நிலையில் இன்றைய போட்டியில் 4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்திருந்தாலும் ரன்களை மிகவும் சுருக்கியிருந்தார் பும்ரா. 4 ஓவர்களில் வெறுமனே 15 ரன்களை மட்டுமே கொடுத்துள்ளார். இதன் எகானமி ரேட் 3.75ஆக உள்ளது. சமீபத்தில் திருமணம் நடந்துள்ள நிலையில் தற்போது ஐபிஎல்லின் பயோ பபுளில் பும்ரா உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, April 29, 2021, 23:37 [IST]
Other articles published on Apr 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+