For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சயின்ஸ் புக்கில் என்ன இருக்குனு தெரியாது.. உருவக் கேலி செய்ய வந்துட்ட.. பும்ரா மனைவி சஞ்சனா பதிலடி!

மும்பை : இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன் உருவக் கேலி செய்த ரசிகர் ஒருவருக்கு கொடுத்துள்ள பதிலடி ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா, தொலைக்காட்சி தொகுப்பாளரும் மாடலுமான சஞ்சனா கணேசனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தமிழரான சஞ்சனா கணேசனை திருமணம் செய்ததன் மூலமாக பும்ரா தமிழ்நாட்டு மருமகனான மாறினார். 2021ஆம் ஆண்டு கோவாவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் பும்ரா - சஞ்சனா கணேசன் தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

Bumrah Wife Sanjana Ganesan lashes out a troll over her body shaming comment in Instagram

அதன்பின் குழந்தையுடன் நேரம் செலவிடும் புகைப்படங்கள் பும்ரா அவ்வப்போது வெளியிட்டு வந்தார். ஆனால் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை அதிகளவில் பதிவிடவில்லை. இந்த நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு விளம்பர வீடியோ ஒன்றை பும்ரா - சஞ்சனா கணேசன் ஜோடி இணைந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டது. அந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வீடியோவுக்கு கீழ், அண்ணியின் உடல் கொஞ்சம் குண்டாக உள்ளது என்று உருவக் கேலி செய்தார்.

Bumrah Wife Sanjana Ganesan lashes out a troll over her body shaming comment in Instagram

இவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சஞ்சனா கணேசன் அந்த கமெண்டிற்கு கீழ், "உன் பள்ளியில் கொடுக்கப்படும் அறிவியல் புத்தகத்தில் உள்ள பாடத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாது. ஆனால் ஒரு பெண்ணின் உடல் வடிவம் பற்றி இங்கு கருத்து கூறுகிறாய்.. ஒழுங்காக இங்கிருந்து ஓடிவிடு" என்று பதில் அளித்துள்ளார். சஞ்சனா கணேசனின் பதில் ரசிகர்கள் மத்தியில் சோசியல் மீடியால் ட்ரெண்டாகி வருகிறது.

2014ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்ட சஞ்சனா கணேசன் இறுதிச்சுற்று வரை சென்றிருந்தார். அதேபோல் மாடலிங் துறையில் முக்கிய நபராக வலம் வந்தவர். திருமணத்திற்கு பின்னரும் தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்த சஞ்சனா கணேசன் குழந்தை வளர்ப்பிற்காக சில காலம் பணியில் இருந்து ஒதுங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, February 13, 2024, 12:52 [IST]
Other articles published on Feb 13, 2024
English summary
Bumrah Wife Sanjana Ganesan lashes out a troll over her body shaming comment in Instagram
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+