Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'அயல்நாட்டு தொடரில் தோனி - கோலி' ஐபிஎல்-ஆல் தங்க முட்டையை இழந்த இங்கிலாந்து.. பட்சர் அதிருப்தி!

இங்கிலாந்து: ஐபிஎல் தொடருக்காக பிசிசிஐ விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்ததன் மூலம் இங்கிலாந்து மிகப்பெரிய தங்கமுட்டையை இழந்துள்ளது என முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக தடைபட்டுள்ள ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்துவதற்கான பணிகளில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதுவரை 29 லீக் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் நடத்தப்படவேண்டியுள்ளது. இதற்காக 30 நாட்கள் கால இடைவெளிக்காக பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

கட்டாயம்

கட்டாயம்

ஐபிஎல்-ஐ நடத்தி முடிக்காவிட்டால் ரூ.2500 கோடி வரை பிசிசிஐ-க்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிலும் டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக செப்டம்பர் மாதத்திலேயே மீதமுள்ள போட்டிகளை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது. எனவே இதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் பிசிசிஐ கோரிக்கை ஒன்றை வைத்திருந்தது.

கோரிக்கை

கோரிக்கை

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய அணி அங்கு அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடர் ஆக.4ம் தேதி தொடங்கி செப்.14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனால் டெஸ்ட் தொடரை ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தொடங்கினால் செப்டம்பரில், இங்கிலாந்திலேயே ஐபிஎல்-ஐ நடத்தி முடித்துவிடலாம் என பிசிசிஐ கோரியது. ஆனால் ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 3வது வாரம் வரை இங்கிலாந்து உள்நாட்டு தொடரான 'தி ஹண்ட்ரெட்' நடைபெறவுள்ளது. எனவே டெஸ்ட் தொடரை மாற்றி அமைத்தால் இதில் விளையாட இங்கிலாந்து வீரர்கள் இருக்கமாட்டார்கள் எனக்கூறி பிசிசிஐ-ன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

மார்க் பட்சர் அதிருப்தி

மார்க் பட்சர் அதிருப்தி

இந்நிலையில் இங்கிலாந்தின் இந்த முடிவுக்கு அந்நாட்டு முன்னாள் வீரர் மார்க் பட்சர் அதிருப்தி தெரிவித்துள்ளார். அவர், இங்கிலாந்து மிகப்பெரும் வாய்ப்பை தவறவிட்டுள்ளது. கடந்த 10 - 15 ஆண்டுகளில் பிசிசிஐ-க்கு முக்கிய தேவை, கோரிக்கை என நான் பார்த்ததில்லை. இது மிகவும் அறிது, இங்கிலாந்து பயன்படுத்திக்கொண்டிருக்க வேண்டும். கொரோனா காரணமாக 'ஹண்ட்ரெட்' தொடரில் பங்கேற்க இந்தாண்டு பெரிய அளவில் வீரர்கள் வரவில்லை. எனினும் தொடர் நடத்தப்படுகிறது.

பெரும் வாய்ப்பு போனது

பெரும் வாய்ப்பு போனது

இந்த நேரத்தில் நாம் பிசிசிஐ-க்கு உதவி செய்தால், பதிலுக்கு இந்தியாவின் முன்னணி வீரர்களான விராட் கோலி, தோனி போன்றோரை அடுத்த 3 ஆண்டுக்கு ஹண்ட்ரெட் தொடரில் விளையாட அனுமதிக்க வேண்டும் என கேட்டிருக்கலாம். அது நமக்கு பெரும் லாபம். ஐபிஎல்-ஐ நடத்தாவிட்டால் பிசிசிஐ-க்கு பல கோடி நஷ்டம், அதே வேளையில் நம் நாட்டில் ஐபிஎல்-ஐ நடத்தி முடிக்க முடியும். இதனை பயன்படுத்தி இந்திய வீரர்களை ஹண்ட்ரெட் தொடருக்கு இழுத்து இருக்கலாம். ஆனால் தற்போது அந்த அரிய வாய்ப்பை இங்கிலாந்து இழந்துவிட்டது என பட்சர் தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, May 28, 2021, 10:50 [IST]
Other articles published on May 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+