47 பந்துகளில் கேமிரான் கிரீன் சதம்.. 16 புள்ளிகளை பெற்றது மும்பை அணி.. சன்ரைசர்ஸ் அதிர்ச்சி தோல்வி
மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐதராபாத்தை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி 16 புள்ளிகளை பெற்றது. தற்போது மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால், பெங்களூரு அணி தங்களது கடைசி போட்டியில் தோற்க வேண்டும்.
ஒரு வேலை பெங்களுரு ஆட்டம் மழையால் ரத்தானால் கூட, ஆர்சிபி அணி தொடரை விட்டு வெளியேறிவிடும். ரன் குவிப்புக்கு சாதகமான மைதானத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் டாஸ் வென்ற ரோகித் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணியின் காஷ்மீர் வீரர் விவராந்த் சர்மாவும், மாயங் அகர்வாலும் அதிரடியாக விளையாடி ரன்கள சேர்த்தனர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்தது. மாயங் அகர்வால் 4 சிக்சர், 8 பவுண்டரிகளை அடித்துள்ளார். இதனால் 46 பந்தில் மாயங் அகர்வால் 83 ரன்களை விளாசினர். விவாந்த் சர்மா 47 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்தார். அதன் பிறகு மும்பை அணியின் ஆகாஷ் மத்வால் அபாரடாக பந்துவீசி, ஐதராபாத் அணியின் முக்கிய விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினார்.
இதன் மூலம் 240 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டிய ஐதராபாத் அணி வெறும் 200 ரன்களை மட்டுமே எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்தது. 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷன் 14 ரன்களில் ஆட்டமிழக்க, ரோகித் சர்மாவும், கேமிரான் கிரீனும் இணைந்து அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
37 பந்துகளில் ரோகித் சர்மா 56 ரன்கள் எடுக்க, கடைசி வரை சிறப்பாக விளையாடிய கேமிரான் கிரீன் 47 பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் 8 சிக்சர்களும், 8 பவுண்டரிகளும் அடங்கும். இறுதியில் சூர்யகுமார் 25 ரன்கள் எடுக்க, மும்பை அணி 18 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. நடப்பு சீசனில் மும்பை அணி 4 முறை வெற்றிக்கரமாக 200 ரன்கள் என்ற ஸ்கோரை எட்டியது.


Click it and Unblock the Notifications