100% வியாபாரி.. ஒரே ஒரு வீரரை கைமாற்றி ஹர்திக்கிற்கான பணத்தை தயார் செய்த அம்பானி.. வேற லெவல் சார்
மும்பை: மும்பை அணியின் இளம் வீரர் கேமரூன் க்ரீன் டிரேடிங் முறையில் ஆர்சிபி அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை அனைத்து அணிகளும் வெளியிட்டுள்ளன. அதில் மும்பை அணி 6 வெளிநாட்டு வீரர்கள், 5 உள்ளூர் வீரர்களை விடுவித்துள்ளதாக அறிவித்தது. ஆனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, மும்பை அணிக்கு ஒப்பந்தம் செய்யப்படவில்லை. அவர் குஜராத் அணியால் தக்க வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.

இதனிடையே விடுவிக்கப்பட்ட வீரர்கள் மூலமாக மும்பை அணியின் பர்ஸ் தொகை ரூ.15.25 கோடியாக இருந்தது. இதன் மூலம் மினி ஏலத்தில் மட்டுமே மும்பை அணியால் பங்கேற்க முடியும். ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் செய்ய கூடுதல் தொகை மும்பை அணிக்கு தேவையாக இருந்தது. இதனிடையே ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு இடையிலான டிரேடிங் தேதி டிச.12 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் மும்பை அணிக்கு இன்னும் வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் விவாதித்தனர். இதனால் வரும் நாட்களில் வீரர்களை டிரேடிங் முறையில் விட்டுக் கொடுத்து, ஹர்திக் பாண்டியாவை குஜராத் அணியிடம் இருந்து ரூ.15 கோடிக்கு வாங்க மும்பை அணி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஒரேயொரு வீரரை மட்டும் டிரேடிங் முறையில் மும்பை அணி விட்டு கொடுத்துள்ளது.
கடந்த ஐபிஎல் சீசனில் ரூ.17.5 கோடிக்கு கேமரூன் க்ரீனை மும்பை அணி ஏலத்தில் எடுத்தது. மும்பை அணிக்காக சிறப்பாக ஆடிய கேமரூன் க்ரீன், தற்போது தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் இருக்கிறார். ஆனால் ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் முறையில் மும்பை அணிக்கு மீண்டும் கொண்டு வருவதற்காக, கேமரூன் க்ரீனை டிரேடிங்கில் விட மும்பை அணி முன் வந்துள்ளது.
கடந்த ஐபிஎல் ஏலத்தில் கேமரூன் க்ரீனை ஏலத்தில் வாங்க ஆர்சிபி அணி மும்முரமாக போட்டிபோட்டது. ஆனால் பெரிய தொகைக்கு ஏலம் சென்ற பின், ஆர்சிபி நிர்வாகிகள் விலகி கொண்டனர். இந்த நிலையில் கேமரூன் க்ரீனை ஆர்சிபி அணிக்கு டிரேடிங் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Story first published: Sunday, November 26, 2023, 20:14 [IST]
Other articles published on Nov 26, 2023


Click it and Unblock the Notifications