For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மும்பைக்கு வந்த அராபியத் துயரம்... எமிரேட்ஸ் சுற்றில் வாத்து முட்டையுடன் திரும்பியது

By Veera Kumar

டெல்லி: நடப்பு சாம்பியன் மும்பைக்கு அணிக்கு என்ன சோதனை காலமோ தெரியவில்லை மோதிய ஐந்து போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றிபெறாமல் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வாத்து முட்டையோடு தாயகம் திரும்பியுள்ளது அந்த அணி.

முதல் பாதி சுற்றுப் போட்டிகள் அமீரகத்தில் முடிவடைந்து விட்டது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மட்டுமே மோதிய போட்டிகள் அனைத்திலும் வென்றுள்ளது.

நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் ஒரு போட்டியிலும் வெல்லாமல் முட்டையுடன் திரும்பியுள்ளது.

முதல் போட்டியில் கொல்கத்தா பந்தாடியது

முதல் போட்டியில் கொல்கத்தா பந்தாடியது

ஐபிஎல் சீசன்-7 முதலாவது போட்டியில் மும்பை அணி கொல்கத்தாவை எதிர்த்தாடியது. நடப்பு சாம்பியன் என்பதால் மும்பை மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது. ஆனால் 41 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் பரிதாபமாக தோற்று அதிர்ச்சியளித்தது மும்பை.

அடுத்து பெங்களூர்.. அதற்கடுத்து சென்னை

அடுத்து பெங்களூர்.. அதற்கடுத்து சென்னை

2வது போட்டியில் பெங்களூர் அணியிடமும், 3வது போட்டியில் சென்னை அணியிடமும் 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது அந்த அணி.

4வது போட்டியில் டெல்லியிடம்

4வது போட்டியில் டெல்லியிடம்

4வது போட்டியில் டெல்லி அணியிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

கடைசிப் போட்டியிலும் மண்ணைக் கவ்வியது

கடைசிப் போட்டியிலும் மண்ணைக் கவ்வியது

அமீரகத்தில் நடக்கும் கடைசி போட்டியிலாவது ஹைதராபாத்துடன் வெற்றி பெறுமா என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தனது 5 போட்டியில் 15 ரன்வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியிடமும் தோல்வியைத்தான் பரிசாக பெற்றது.

முட்டையுடன் மும்பை ரிட்டர்ன்

முட்டையுடன் மும்பை ரிட்டர்ன்

ஐந்து போட்டியிலும் தொடர்ந்து தோல்வியடைந்து முட்டையுடன் தாயகம் திரும்பும் மும்பை அணி, வரும் 3ம்தேதி பஞ்சாப் அணியுடன் மோதுகிறது. அந்த அணியோ மோதிய ஐந்து பந்தையத்திலும் வெற்றிபெற்றுள்ளது.

'டிஸ்டிங்ஷன்' vs 'முட்டை'

'டிஸ்டிங்ஷன்' vs 'முட்டை'

100க்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவனுடன் முட்டை எடுத்த மாணவன் தேர்வு எழுதினால் எப்படியிருக்கும் என்ற ஆவலில் ரசிகர்கள் உள்ளனர்.

Story first published: Thursday, May 1, 2014, 18:09 [IST]
Other articles published on May 1, 2014
English summary
Mumbai Indians, after crushing to a 5th successive defeat this season, seem to have relinquished their chances of making it to the playoffs for the first time in 5 seasons.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+