Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் தொடரோட முதல் போட்டி... முதல்முறையா மோதும் கிங் + ஹிட்மேன்... தரமான சம்பவங்கள் காத்திருக்கு!

சென்னை : ஐபிஎல் 2021 தொடர் இன்றைய தினம் துவங்கவுள்ள நிலையில் முதல் போட்டியில் ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இரு அணிகளும் மிகவும் வலிமையாக இந்த தொடரை மட்டுமின்றி இந்த போட்டியையும் எதிர்கொள்ள தயாராக உள்ளன.

இந்நிலையில் முதல் முறையாக தொடரின் துவக்க போட்டியில் இரு அணிகளும் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் துவக்கம்

சென்னையில் துவக்கம்

ஐபிஎல் 2021 தொடர் இன்றைய தினம் சென்னையில் முதல் போட்டியுடன் துவங்கவுள்ளது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதவுள்ளன. இதுவரை இல்லாத வகையல் இரு அணிகளும் தொடரின் முதல் போட்டியில் மோதவுள்ளன.

சிறப்பான ஆல்-ரவுண்டர்கள்

சிறப்பான ஆல்-ரவுண்டர்கள்

ஐபிஎல் போட்டிகளுக்கென ஆர்சிபி தன்னை மிகுந்த வலிமையுடன் தயாராக வைத்துள்ளது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் மற்றும் பௌலர்கள் சிறப்பான வகையில் களமிறங்கவுள்ளனர். மேலும் வெளிநாட்டு ஆல்-ரவுண்டர்களான க்ளென் மாக்ஸ்வெல் மற்றும் கைல் ஜாமீசன் அணியில இணைக்கப்பட்டுள்ளது மேலும் அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.

படிக்கல்லுடன் துவக்கம்

படிக்கல்லுடன் துவக்கம்

இந்த சீசன் முழுவதிலும் துவக்க வீரராக தேவ்தத் படிக்கல்லுடன் இணைந்து விளையாடவுள்ளதாக விராட் கோலி அறிவித்துள்ளதும் அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டீ வில்லியர்ஸ், மாக்ஸ்வெல் ஆகியோரின் பேட்டிங் லைன்-அப்பும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பௌலர்களுக்கு டப் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை வீரர்கள்

மும்பை வீரர்கள்

ஆயினும் ஜஸபிரீத் பும்ரா, ட்ரெண்ட் போல்ட், பியூஷ் சாவ்லா போன்ற மும்பை இந்தியன்ஸ் பௌலர்கள் அதிகமான திறன் மற்றும் அனுபவத்துடன் ஆர்சிபி அணியின் பேட்ஸ்மேன்களை எதிர்கொள்வார்கள். மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் ரோகித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ்., ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வீரர்கள் ஆர்சிபியின் வெற்றிக் கனவுக்கு பங்கமாக செயல்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கலாம்.

சஹலின் விக்கெட்டுகள்

சஹலின் விக்கெட்டுகள்

இதனிடையே ஆர்சிபி பௌலர்கள் முகமது சிராஜ், சைனி, ஜம்பா, வாஷிங்டன் சுந்தர் போன்றவர்களும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடுமையான நெருக்கடியை அளிப்பார்கள். மேலும் சஹலும் சில முக்கிய விக்கெட்டுகளை எடுக்கும் சூழலில் எதிரணிக்கு போட்டி கடுமையானதாக இருக்கும்.

சிறப்பான அனுபவம்

சிறப்பான அனுபவம்

மொத்தத்தில் இன்றைய முதல் போட்டியே ரசிகர்களுக்கு மிகவும் சிறப்பான அனுபவத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். இரவு 7.30 மணிக்கு துவங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வெற்றியும் முக்கியமானதாக அமையும். சென்னையில் நடைபெற்ற கடந்த போட்டிகளில் டாஸ் வெற்றி முக்கிய பங்காற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, April 9, 2021, 22:29 [IST]
Other articles published on Apr 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+