Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ரா பக்கத்தில் கூட மற்ற இந்திய பவுலர்கள் வர முடியாது.. ராகுல் இனி இதை மறந்துவிட வேண்டும்- பாசித்

மும்பை : பும்ராவின் செயல் திறன் அருகில் எந்த ஒரு இந்திய பவுலர்களும் வர முடியாது என்று முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாசித் அலி தெரிவித்து இருக்கிறார். பாகிஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாசித் அலி, பங்கேற்று இந்திய அணி குறித்து பேசினார்.

அப்போது சாம்பியன்ஸ் கோப்பை தொடர இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக யார் இருப்பார்கள் என பாசித் அலியிடம் கேள்வி கேட்கப்பட்டது.இதற்கு பதில் அளித்த பாசித் அலி, என்னுடைய முதல் சாய்ஸ் என்றால் அது ரிஷப் பண்ட் தான்.

virat kohli rohit sharma jasprit bumrah champions trophy 2025

சஞ்சு சாம்சன் என்னுடைய இரண்டாவது சாய்ஸாக இருப்பார். இதனால் கே எல் ராகுல் விக்கெட் கீப்பராக அணியில் இடம் பெறுவது மிகவும் கடினமாக இருக்கும்.
இதேபோன்று விராட் கோலி இடம் அதிக உடல் தகுதி இருக்கிறது. ஜெய்ஸ்வால், கில் போன்ற திறமை வாய்ந்த இளைஞர்கள் இருந்தாலும் அவர்கள் யாரும் கோலி அளவுக்கு டாப் கிளாஸ் வீரர்கள் கிடையாது. தற்போது இருக்கும் வீரர்களிடம் விராட் கோலி போன்ற அளவு உடல் தகுதி கிடையாது.

விராட் கோலி களத்திற்கு புகுந்தால் மற்ற பில்டர்களை உத்வேகம் செய்வது, பில்டிங்கிற்காக இடம் மாறுவது என மைதானத்தின் நான்கு பக்கமும் விராட் கோலி சென்று கொண்டே இருப்பார்.இந்திய அணி பந்துவீச்சை பொறுத்தவரை பும்ரா தான் இருப்பதிலேயே சிறந்த வீரர். சமி, ஆர்ஸ்தீப் சிங், சிராஜ் என மற்ற பவுலர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் யாரும் பும்ரா அருகில் கூட வர மாட்டார்கள். எனினும் பும்ரா அளவுக்கு அருகில் வரை செயல்படக்கூடிய ஒரு வீரர் என்றால் அது ஷமிதான். ஆனால் அதற்கு அவர் முழு உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்று பாசித் அலி கூறியுள்ளார். இதனிடையே, சாம்பியன்ஸ் கோப்பை தொடர்கான அறிமுக நிகழ்ச்சி பிப்ரவரி 16 அல்லது 17ஆம் தேதி லாகூரில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்திருக்கிறது. மேலும் ரோகித் செல்வாரா என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

Story first published: Thursday, January 16, 2025, 7:32 [IST]
Other articles published on Jan 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+