For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஏன் இப்படி ஆகுது.. இங்கிலாந்து டெஸ்ட் போட்டியை பார்த்து கலக்கத்தில் சிஎஸ்கே.. உடனே ஏதாவது பண்ணுங்க?

சென்னை: இங்கிலாந்து இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியை பார்த்து சிஎஸ்கே அணி கொஞ்சம் கலக்கத்தில் உள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் இந்தியா இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இதில் இந்தியா வெற்றிபெறவும், இங்கிலாந்து வெற்றிபெறவும், போட்டி டிரா ஆகும் வாய்ப்பு உள்ளது.

நான்காவது நாள் ஆட்டம் நடந்து வரும் நிலையில், எந்த விதமான முடிவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்திய அணி தற்போது பவுலிங் செய்து வருகிறது.

பேட்டிங்

பேட்டிங்

இந்த டெஸ்ட் போட்டியில் சென்னை பிட்ச் தொடக்கத்தில் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்தது. முதல் மூன்று நாட்கள் பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்தது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி எளிதாக 578 ரன்கள் எடுத்தது.

 எத்தனை ரன்கள்

எத்தனை ரன்கள்

அதன்பின் களமிறங்கிய இந்திய அணி பேட்டிங்கில் திணற தொடங்கியது. காரணம் மூன்றாவது நாளின் பாதியில் இருந்து பிட்ச் மொத்தமாக பவுலிங் செய்ய சாதகமாக மாறியது. இதனால் இந்திய அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. இப்போது பிட்ச் மொத்தமாக பவுலிங் பிட்சாக மாறியுள்ளது.

சென்னை

சென்னை

சென்னை பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு எப்போதும் சாதகமாக இருக்கும். ஆனால் இந்த முறை செம்மண் சேர்க்கப்பட்டு பிட்ச் உருவாக்கப்பட்டு இருக்கிறது . இதனால் ஸ்பின் பவுலிங்குடன் சேர்த்து பிட்ச் அதிகமாக பவுன்ஸ் ஆகவும் தொடங்கி உள்ளது. சென்னை பிட்ச் இந்த வருடம் முழுக்க இப்படி இருக்கும் என்கிறார்கள்.

சேப்பாக்கம்

சேப்பாக்கம்

சேப்பாக்கம் மைதானத்தில் 4 பிட்ச்கள் வரை உள்ளது. இந்த பிட்ச்கள் அனைத்தும் இதேபோல் ஸ்பின் பிட்சாகவே இருக்கும். இதனால் சிஎஸ்கே அணி ஐபிஎல் 2021 தொடரில் சென்னையில் ஆடும் 7 போட்டிகளில் அதிகம் திணற வாய்ப்புள்ளது. சென்னை அணியிடம் தற்போது ஸ்பின் பவுலர்கள் இல்லை.

ஸ்பின் பவுலர்கள்

ஸ்பின் பவுலர்கள்

சென்னை அணி சாவ்லா, ஹர்பஜன் உள்ளிட்ட ஸ்பின் பவுலர்களை வெளியேற்றிவிட்டது. இதனால் சென்னையின் ஸ்பின் பிட்சில் ஆடும் அளவிற்கு ஸ்பின் பவுலர்களை ஏலம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே அணி உள்ளது. சென்னையில் ஆடும் வகையில் அனுபவம் மிக்க ஸ்பின் பவுலர்களை சிஎஸ்கே கொண்டு வர வேண்டும்.

இந்திய ஸ்பின்

இந்திய ஸ்பின்

முக்கியமாக தற்போது அஸ்வின் போன்ற பவுலர்கள் சென்னையில் கலக்கி வருகிறார்கள். இதனால் சிஎஸ்கே அணி சாய் கிஷோர் போன்ற சென்னை பாய்ஸ்களை பயன்படுத்த வேண்டும். தமிழக வீரர்களை 2021 ஏலத்தில் சிஎஸ்கே அணி குறி வைக்க வேண்டும்.

Story first published: Monday, February 8, 2021, 13:29 [IST]
Other articles published on Feb 8, 2021
English summary
Spin supporting Chennai pitch may be a nightmare for CSK team in the upcoming IPL 2021.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+