சி.எஸ்.கே.வில் அதிரடி மாற்றம்.. களமிறங்கும் உத்தப்பா?.. சி.எஸ்.கே- ஹைதராபாத் பிளெயிங் லெவன் இதுதான்!
துபாய்: ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. தல தோனி தலைமையிலான சென்னையை பொறுத்தவரை புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் கம்பீரமாக உள்ளது.
சென்னை பிளே ஆப் சுற்றுக்கு உள்ளே செல்ல இன்னும் ஒரு வெற்றி போதும். ஓப்பனிங்கில் ருத்ராஜ், டு பிளிசிஸ் வழக்கமான அதிரடியை காட்ட தயாராக இருக்கின்றனர். நடு வரிசையில் மொயீன் அலி, ரெய்னா, ராயுடு ஆகியோர் நம்பிக்கை கூட்ட காத்திருக்கின்றனர்.

தோனியின் பார்ம்
சி.எஸ்.கே தொடர்ந்து வெற்றி வாகை சூடினாலும் கேப்டன் தோனியின் பார்ம் தொடர்ந்து கவலையளிப்பதாக உள்ளது. அதுவும் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் வருண் சக்கரவர்த்தியின் கூக்ளி பந்தில் மிக மோசமான முறையில் அவுட்டானார் தோனி. கடந்த போட்டியில் பிராவோவுக்கு பதிலாக இடம்பெற்ற சாம் கரண் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் பெரிதாக சோபிக்கவில்லை. அணியில் இதுவரை இடம் கிடைக்காத ராபின் உத்தபாவுக்கு இன்று இடம் கிடைக்கும் என்று தெரிகிறது.

ஜேசன் ராய் அதிரடி
பவுலிங் டிபார்ட்மெண்டில் தீபக் சாஹர், ஷரத்துல் தாக்கூர் உள்ளிட்டோர் மிரட்டுகின்றனர். கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியை பொறுத்தவரை ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து விட்டது. தொடர் தோல்வியால் துவண்டு இருந்த நிலையில் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றது. மோசமான பார்மில் இருக்கும் வார்னருக்கு பதிலாக வந்த ஜேசன் ராய் முதல் ஆட்டத்திலேயே அதிரடி அரைசதம் அடித்து முத்திரை பதித்து விட்டார்.
Recommended Video

ரஷீத்கான் சிறப்பு
அணியில் ராய், வில்லியம்சன், ஹோல்டர் தவிர சொல்லி கொள்ளும்படியான பேஸ்ட்மேன்கள் யாரும் இல்லை. பவுலிங்கை பொறுத்தவரை ரஷீத்கான் தனது பணியை சிறப்பாக செய்கிறார். சித்தார்த் கவுல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. புள்ளி பட்டியலில் கவுரமான நிலைக்கு செல்ல ஹைதராபாத் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற முயற்சிக்கும். இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளின் பிளெயிங் லெவன் பின்வருமாறு:-

பிளெயிங் லெவன்
சென்னை: ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், மொயீன் அலி, அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, எம்எஸ் தோனி(கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ராபின் உத்தப்பா, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்
ஹைதராபாத்: ஜேசன் ராய், விருத்திமான் சாஹா, கேன் வில்லியம்சன்(கேப்டன்), ப்ரியம் கார்க், அபிஷேக் சர்மா, அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா

டாஸ் பயன்
சார்ஜா மைதானத்தை பொறுத்தவரை மிகவும் சிறியதாகும். எனவே அடிக்கடி பந்துகள் கூரை மேல் பறப்பதை பார்க்கலாம். இந்த மைதானத்தில் இரண்டாவது பாதியில் மின்னொளியில் பேட்டிங் சற்று எளிதாக இருக்கும். எனவே, டாஸ் வென்ற பிறகு கேப்டன்கள் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்யலாம்.


Click it and Unblock the Notifications