Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சென்னை சூப்பர் கிங்ஸ் போராடி தோற்றது... மும்பை இந்தியன்ஸுக்கு தொடர் வெற்றி!!

Mumbai Indians and Chennai Super Kings
மும்பை: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போராடி தோல்வி அடைந்தது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டோணி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் ஜெயித்த டோணி முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

இதை தொடர்ந்து டெண்டுல்கரும், சதீசும் மும்பை அணியின் இன்னிங்சை தொடங்கினார்கள். இருவரும் சென்னை வேகப்பந்து வீச்சின் தாக்குதலில் நீடிக்கவில்லை. சதீஸ் ரன்ஏதுமின்றியும், டெண்டுல்கர் 5 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். இந்த ஐ.பி.எல்.-ல் தெண்டுல்கர் ஒற்றை இலக்கில் அவுட் ஆவது இதுதான் முதல் தடவை.

இதன் பின்னர் ரோகித் ஷர்மாவும், அம்பத்தி ராயுடுவும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். அணியின் ஸ்கோர் 74 ரன்களை எட்டிய போது, ராயுடு 27 ரன்களில் ஸ்டம்பிங் மூலம் விக்கெட்டை இழந்தார்.

165 ரன்கள் இலக்கு

இதை தொடர்ந்து ரோகித் ஷர்மாவுடன், சைமண்ட்ஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். குறிப்பாக ரோகித் ஷர்மா, சென்னை பந்து வீச்சை பவுண்டரியும், சிக்சருமாக விரட்டினார். ஆனாலும் கடைசி ஓவரில் போலிஞ்சர் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். ரோகித் ஷர்மா 87 ரன்கள் குவித்தார். இதில் 5 சிக்ஸர்களும் அடங்கும்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. சைமண்ட்ஸ் 31 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

ஏமாற்றிய ரெய்னா - முரளி விஜய்

அடுத்து 165 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணிக்கு முரளிவிஜய் கைகொடுக்கவில்லை. அவர் 12 ரன்களிலும் அடுத்து வந்த ரெய்னா 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதன் பின்னர் மைக் ஹஸ்ஸியும், பத்ரிநாத்தும் அணியை வீழ்ச்சியில் இருந்து மீட்டு ஓரளவு நல்ல நிலைக்கு கொண்டு வந்தனர். ஸ்கோர் 98 ரன்களை எட்டிய போது ஹஸ்ஸி 41 ரன்களுடன் வெளியேற, தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்தன. ஆனாலும் பத்ரிநாத் மறுபக்கம் போராடினார். கேப்டன் டோணி 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளைச் சரித்தார். பத்ரிநாத் இறுதிவரை போராடி பார்த்தும் இலக்கை நெருங்க முடிந்ததே தவிர பலன் இல்லை. சென்னை அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 156 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் ஹர்பஜன்சிங் 5 விக்கெட்டுகளை அள்ளினார். மலிங்கா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

5- ஆட்டங்களில் ஆடியுள்ள சென்னை அணிக்கு இது 3-வது தோல்வியாகும். முன்னதாக பஞ்சாப், கொச்சி அணிகளிடமும் தோல்வி கண்டிருந்தது.

அதே சமயம் 5-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணிக்கு இது 4-வது வெற்றியாகும். கடந்த ஆண்டு இறுதிப்போட்டியில் சென்னையிடம் அடைந்த தோல்விக்கும் பழிதீர்த்து கொண்டது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:46 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+