For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

புதிய சாதனை படைத்த புஜாரா.. ஆஸி. தொடருக்கு முன்பு அசத்தல்.. தனி ஆளாக போராடிய தடுப்புச்சுவர்

ராஜ்காட் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முக்கிய டெஸ்ட் தொடர் இன்னும் 20 நாட்களில் தொடங்க உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா சிறப்பான சம்பவம் ஒன்றை செய்துள்ளார்.

ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி குறைந்தபட்சம் மூன்று டெஸ்ட் போட்டிகளை வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும்.

விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் டெஸ்டில் எந்த அளவிற்கு பார்மில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

Cheteshwar Pujara acheived another milestone in his carrier ahead of australia series

இதில் ரிஷப் பண்ட் கார் விபத்து காரணமாக போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது அணியில் பார்மில் இருக்கும் ஒரே வீரர் என்றால் அது புஜாரா தான். இந்த நிலையில் புஜாரா இன்று ஒரு பெரிய சம்பவத்தை செய்து இருக்கிறார்.

அதாவது இந்திய மண்ணில் 12000 ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையை புஜாரா படைத்திருக்கிறார். ஆந்திர பிரதேசத்திற்கு எதிரான ரஞ்சிப் போட்டியில் சௌராஷ்டிரா அணிக்காக புஜாரா விளையாடினார். இதில் கடினமான இரண்டாவது இன்னிங்சில் தனி ஆளாக நின்று போராடிய புஜாரா 91 ரன்கள் குவித்தார். எனினும் ஆந்திர பிரதேசத்திடம் சௌராஷ்டிரா அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இரண்டாவது இன்னிங்ஸில் புஜாரா சிறப்பாக ஆடிய விதம் இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக புஜாரா எப்போதும் சிறப்பாக விளையாடி இருக்கிறார். இதுவரை 20 டெஸ்டில் ஆஸ்திரேலியாவுடன் புஜாரா மோதி இருக்கிறார். இதில் அவர் 1893 ரன்கள் குவித்து இருக்கிறார். இதில் ஐந்து சதங்களும் ,10 அரை சதங்களும் அடங்கும். சராசரியாக ஆஸ்திரேலியாக்கு எதிராக புஜாரா 54 ரன்கள் அடித்திருக்கிறார்.

Story first published: Friday, January 20, 2023, 23:34 [IST]
Other articles published on Jan 20, 2023
English summary
Cheteshwar Pujara acheived another milestone in his carrier ahead of australia series புதிய சாதனை படைத்த புஜாரா.. ஆஸி. தொடருக்கு முன்பு அசத்தல்.. தனி ஆளாக போராடிய தடுப்புச்சுவர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+