Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன ஒரு ஆளுமை... மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு சச்சின் பாராட்டு!

மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2020 இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வெற்றி கொண்டுள்ளது.

இந்த வெற்றி மூலம் தன்னுடைய ஐந்தாவது ஐபிஎல் கோப்பையை கைகொண்டுள்ளது ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி.

இந்நிலையில் இந்த போட்டியில் மும்பை அணி முழுமையான ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளதாக முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Complete Domination: Sachin Tendulkar Congratulates Mumbai Indians For Winning Fifth IPL Title

நேற்றைய ஐபிஎல் 2020 இறுதிப்போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி கொண்டு ஐபிஎல்லில் தனது 5வது கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த தொடர் முழுவதிலும் தங்களுடைய சிறப்பான ஆட்டங்களை கொடுத்த மும்பை இந்தியன்ஸ் இந்த வெற்றியை ரசிகர்களுக்கு பரிசளித்துள்ளது.

இந்த வெற்றிக்கு பல்வேறு தரப்பினரும் முன்னாள் வீரர்களும் தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரும் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி முழுமையான ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, November 11, 2020, 10:58 [IST]
Other articles published on Nov 11, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+