சென்னை:ஐபிஎல்லில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் பிரதமர் மோடிக்கு சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் மோடி மக்களிடையே தேர்தலில் வாக்களிப்பது குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறார். திரை உலக பிரபலங்கள், புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரையும் ட்விட்டர் வழியே அவர் அழைப்பு விடுத்து வருகிறார்.

அந்த வகையில் கிரிக்கெட் வீரர் அஷ்வினுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருக்கிறார். அதனை தொடர்ந்து அதற்கு அஸ்வினும் பதிலளித்து உள்ளார்.
அவர் தமது டுவிட்டர் பதிவில் பதில் அளித்திருக்கிறார். அந்த பதிவில் அஸ்வின் கூறி இருப்பதாவது:
சரியான தலைவரை தேந்தெடுப்பதற்கு நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தாலும் வாக்களிக்க வேண்டும் என்று பதிவிட்டார்.
இத்துடன் ஒரு கோரிக்கையையும் பிரதமர் மோடியிடம் அஷ்வின் வைத்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: ஐபிஎல்லில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் அவர்கள் எங்கிருந்து வாக்களிக்க விரும்பினாலும் வாக்களிக்க அனுமதிக்க அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கிறேன் என்று தெரிவித்தார். அஸ்வின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் தலைவர் அஸ்வின் என்பது குறிப்பிடத்தக்கது.