For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

4773 நாட்களுக்கு பிறகு சிஎஸ்கே வெற்றி..மும்பை அணியை சொந்த மண்ணில் வீழ்த்திய தோனி.. பழித்தீர்த்த CSK

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ஆண்டுகளுக்கு பிறகு, சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை அணியை வீழ்த்தி அசத்தியது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற தோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரராக இஷான் கிஷன் - கேமரூன் க்ரீன் இணை களமிறங்கியது.இதையடுத்து துஷார் தேஷ்பாண்டே வீசிய 2வது ஓவரில் கேமரூன் க்ரீன் 6 ரன்களில் ஆட்டமிழக்க, தீபைக் சஹர் வீசிய 3வது ஓவரில் இஷான் கிஷன் 7 ரன்களிலும், ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதனால் மும்பை அணி 14 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

csk beat Mumbai indians at chepauk after 13 years

பின்னர் வந்த நேஹல் வதேரா - சூர்யகுமார் யாதவ் இணை நிதானமாக ஆடியது. இதனால் மும்பை அணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் 34 ரன்கள் மட்டுமே சேர்த்தது.இதன்பின்னர் சூர்யகுமார் யாதவ் ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரியை விளாச தொடங்கினார். சூர்யகுமார் யாதவ் அட்டாக் செய்ய நினைத்து ஜடேஜா பந்துவீச்சில் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய இளம் வீரர் நேஹல் வரேதா 46 பந்துகளில் அரைசதம் விளாசினார்.அதன்பின்னர் ஜடேஜா வீசிய 17வது ஓவரிஉல் மும்பை அணி 17 ரன்களை விளாசியது. இதனால் மும்பை அணி சவாலான இலக்கை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பதிரானா பந்துவீச்சில் நேஹல் வதேரா 64 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் துஷார் தேஷ்பாண்டே வீசிய 19வது ஓவரில் டிம் டேவிட் 2 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் மீண்டும் பதிரானா வீசிய கடைசி ஓவரில் அர்ஷத் கான் 1 ரன்னிலும், ஸ்டப்ஸ் 20 ரன்களில் வெளியேறினர். இறுதியாக மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள் சேர்த்துள்ளது. 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி, ருதுராஜ் 16 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார்.

முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 46 ரன்கள் சேர்த்தார். கான்வே ஒரு புறம் நிலைத்து நின்று விளையாட ரஹானே 21 ரன்களிலும், ராயுடு 12 ரன்களிலும் ஆட்டமிழக்க கான்வே 44 ரன்களில் வெளியேற, இறுதியில் சிவம் துபே 26 ரன்கள் எடுக்க, தோனி அணியின் வெற்றி ரன்னை எடுத்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்தார். இதன் மூலம் 17.4வது ஓவரில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் சிஎஸ்கே அணி 11 போட்டிகளல் விளையாடி 13 புள்ளிகள் பெற்று 2வது இடத்திற்கு முன்னேறியது. மும்பை 10 புள்ளியுடன் 6வது இடத்தில் உள்ளது.

Story first published: Saturday, May 6, 2023, 19:19 [IST]
Other articles published on May 6, 2023
English summary
csk beat Mumbai indians at chepauk after 13 years 4773 நாட்களுக்கு பிறகு சிஎஸ்கே வெற்றி..மும்பை அணியை சொந்த மண்ணில் வீழ்த்திய தோனி.. பழித்தீர்த்த CSK
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+