For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் நடந்தால் சிஎஸ்கேவுக்கு சிக்கல்.. உடையும் தோனியின் வியூகம்.. கவலையே இல்லை என நிர்வாகம் அசால்ட்

சென்னை: ஐபிஎல் தொடர் செப்டம்பரில் தொடங்கினால் சிஎஸ்கே அணிக்கு பெரும் சிக்கல் உருவாகியுள்ளது.

கொரோனாவால் தடைபட்டுள்ள ஐபிஎல் தொடரை செப்டம்பரில் மீண்டும் நடத்தும் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகள் முடிந்தவுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப். 18 அல்லது 19ம் தேதி முதல் அக்டோபர் 10ம் தேதி வரை நடத்தவிருப்பதாக தகவல் வெளியானது.

பிசிசிஐ கூட்டம்

பிசிசிஐ கூட்டம்

பிசிசிஐ சார்பில் இன்று 'SGM' எனப்படும் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஐபிஎல் தொடர் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது. மும்பையில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

இங்கிலாந்து திட்டவட்டம்

இங்கிலாந்து திட்டவட்டம்

இந்தியாவுடனான டெஸ்ட் தொடருக்கு பிறகு இங்கிலாந்து அணிக்கு வங்கேதசம் மற்றும் பாகிஸ்தான் அணியுடன் ஒருநாள் மட்டும் டி20 போட்டி தொடர்கள் நடைபெறவுள்ளது. இதனால் இங்கிலாந்து வீரர்கள் தாய் நாட்டிற்கு தான் முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இதனால் ஐபிஎல்-ல் இங்கிலாந்து வீரர்களின் பங்கேற்பு இருக்காது என தெரிகிறது.

சென்னை அணி

சென்னை அணி

இங்கிலாந்து வீரர்கள் இல்லாதது சிஎஸ்கே அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அந்த அணியில் புதிதாக சேர்க்கப்பட்ட மொயின் அலி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பேட்டிங்கில் 3வது வீரராக களமிறங்கி நன்கு செட்டில் ஆகியுள்ளார். இந்த சீசனில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 206 ரன்களை சேர்த்துள்ளார். பவுலிங்கில் 5 விக்கெட்கள் எடுத்துள்ளார். அதே போல அந்த அணியின் நட்சத்திர வீரராக சாம் கரண் வளர்ந்துள்ளார். இந்த சீசனில் அவர் விளையாடிய 7 போட்டிகளில் 9 விக்கெட்களை கைப்பற்றி அசத்தியுள்ளார். எனவே இவர்கள் இல்லாதது சிஎஸ்கேவுக்கு பிரச்னையாக பார்க்கப்படுகிறது.

பிரச்னை இல்லை

பிரச்னை இல்லை

இந்நிலையில் இங்கிலாந்து வீரர்கள் இல்லாவிட்டால் எந்த பிரச்னையும் கிடையாது என சிஎஸ்கே தலைமை அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஐபிஎல்-ல் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க அனுமதியளிக்கவில்லை என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அப்படி அனுமதி கொடுக்கவில்லை 2 முக்கிய வீரர்களை இழக்க தான் வேண்டும். எனினும் அதுகுறித்து தற்போது எந்த கவலையும் எங்களுக்கு இல்லை எனக்கூறியுள்ளார்.

Story first published: Saturday, May 29, 2021, 14:16 [IST]
Other articles published on May 29, 2021
English summary
CSK CEO Kasi Viswanathan on England players unavailability in Second Leg of IPL 2021
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+