Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

MI vs CSK: "குருபாய் ஒருத்தர் தான்.. அது என்னிக்கும் தோனி தான்" சிஎஸ்கே ரசிகர்கள் அலப்பறை மீம்ஸ் இதோ

மும்பை: வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றியை பெற்றது. ரஹானே பேட்டிங், ஜடேஜா பவுலிங், தோனி ரிவ்யூ சிஸ்டம், ருதுராஜ் ஆட்டம் என்று சிஎஸ்கே ரசிகர்களுக்கு தேவையான அத்தனை அம்சங்களும் ஒரே போட்டியில் அமைந்தது. இதனை வைத்து மும்பை ரசிகர்களை வம்புக்கு இழுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட மீம்ஸ்களை பார்க்கலாம்.

CSK fans created Stunning memes after defeated Mumbai by 7 Wickets in IPL 2023

சென்னை அணியின் பேட்டிங்கின் போது ஓய்வறையில் அமர்ந்திருந்த தோனியை தொலைக்காட்சியில் காட்டிய போது, ஐபிஎல் ஃபேன் போல் சார்பாக அனைத்து ஐபிஎல் தொடரையும் ஒப்பிட்டு சிறந்த பிளேயிங் லெவனை நீங்கள் எடுத்தால், அந்த அணிக்கு உங்களின் கேப்டன் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரோகித் சர்மாவுக்கு 16% வாக்குகளும், எம்எஸ் தோனிக்கு 74% வாக்குகள் கிடைத்தன. இதனை "குரு" படத்தில் மாதவனிடம் அபிஷேக் பச்சன் பேசும், "குருபாய் ஒருத்தர்தான்.. அது நான்தான்" என்று சிரித்து கொண்டே சொல்லும் வகையில் உருவாக்கப்பட்ட மீம் தோனி ரசிகர்களுக்கு கூல்பம்ப் மெட்டீரியல்.

CSK fans created Stunning memes after defeated Mumbai by 7 Wickets in IPL 2023

சென்னையின் அணியின் ஸ்பின்னர்களான ஜடேஜா 20 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், சான்ட்னர் 28 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனை மாற்றான் படத்தில் வரும் இரட்டையர் சூர்யாவுடன் ஒப்பிட்டு, "இவன் ஒருபக்கம் அவன் மறுபக்கம் இது எதுவோ.. அட பூவும் தலையும் சேர்ந்த பக்கம் அதுவோ" என்ற வரிகளோடு கராத்தே செய்யும் புகைப்படத்தோடு உருவாக்கப்பட்ட மீம் தக் லைஃப் ரகம்.

CSK fans created Stunning memes after defeated Mumbai by 7 Wickets in IPL 2023

வழக்கமாக ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக சென்னை அணியின் ரசிகர்கள் சொல்லும் வசனங்களில் ஒன்று, ஒரு அணியுடன் இறுதிப்போட்டியில் விளையாட மற்ற 9 அணிகளும் சேர்ந்து ஆடும் தொடரே ஐபிஎல் என்று பேசுவார்கள். இதனை சச்சின் படத்தில் வடிவேலு ஒரு பெண்ணிடம், மூச்சு வாங்கிக் கொண்டே IPL is a Tournament where 9 other teams.. அதானேடா.. அதேதான் என்று சொல்வது போல் உருவாக்கப்பட்ட மீம் அலப்பறை மெட்டீரியல்.

CSK fans created Stunning memes after defeated Mumbai by 7 Wickets in IPL 2023

நேற்றையப் போட்டியில் மும்பை பேட்டிங் செய்த போது கடைசி ஓவரில் ஒய்டு-க்கு, அந்த அணியின் ஷோக்கீன் மேல்முறையீடு செய்திருந்தார். ஆனால் அதனை கண்டுகொள்ளாத தோனி, களத்தில் இருந்து வெளியேற தொடங்கினார். அது ஒய்டு பந்து அல்ல என்பதை அறிந்ததால், முடிவை பற்றி தோனி முன்பே அறிந்திருந்தார். இதனை பரிதாபங்கள் கோபியை சுதாகர் கலாய்க்கும், "எத்தனையாவது உருட்டிட்டு இரு" வசனத்தை போல் தோனி ஷோக்கீனை டீல் செய்ததாக உருவாக்கப்பட்ட ஃபன் மெட்டீடியல்.

CSK fans created Stunning memes after defeated Mumbai by 7 Wickets in IPL 2023

நேற்றைய போட்டியில் திடீரென களமிறக்கப்பட்ட ரஹானே, நடப்பு ஐபிஎல் தொடரின் அதிவேக அரைசதத்தை விளாசினார். இதனை ரசிகர்கள் ஆச்சரியமடைந்ததோடு, பலரும் அதிர்ச்சியடைந்தனர். இதனை கிண்டல் செய்யும் வகையில் வேதாளம் படத்தில் வரும் சூரி சொல்வது போல், ஷாக்க கொற.. ஷாக்க கொற என்ற வசனத்தை ரஹானே சொல்வது போல் உருவாக்கப்பட்ட மீம் வெறித்தனம்.

Story first published: Sunday, April 9, 2023, 7:18 [IST]
Other articles published on Apr 9, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+