அந்த இடத்தில் யாருமே இல்லை.. நிறைய கேப் விழுந்துருச்சு.. கோபத்தில் தோனி.. சிஎஸ்கேவிற்கு சிக்கல்!
சென்னை: சிஎஸ்கே அணி 2021 ஐபிஎல் தொடருக்கு தேர்வாகி வரும் நிலையில் அணிக்குள் முக்கியமான சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது.
2021 ஐபிஎல் தொடரில் எப்படியாவது கோப்பை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சிஎஸ்கே அணி இருக்கிறது. இதற்காக ஐபிஎல் 2021 மினி ஏலத்தில் முக்கியமான வீரர்களை சிஎஸ்கே அணி எடுக்கும் என்று கருதப்படுகிறது.
இந்த ஏலம் வரும் பிப்ரவரி 18ம் தேதி சென்னையில் நடக்க உள்ளது. 1500 வீரர்கள் வரை இந்த ஏலத்திற்காக பெயரை பதிவு செய்துள்ளனர்.

எப்படி
2021 ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் சிஎஸ்கே யாரை எல்லாம் குறி வைக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது. சிஎஸ்கே அணியில் ஒரு வெளிநாட்டு வீரர் தேவை. இந்த நிலையில் ஓப்பனிங் வீரருக்கு பதிலாக சிஎஸ்கே அணி வெளிநாட்டு ஆல் ரவுண்டரை எடுக்கும் என்று கூறுகிறார்கள்.

சென்னை
அதாவது இந்திய வீரர்களை வைத்து ஓப்பனிங் இறங்க சொல்லிவிட்டு, வெளிநாட்டு வீரர்களை மிடில் ஆர்டருக்கு கொண்டு வர சிஎஸ்கே அணி திட்டமிட்டுள்ளது என்கிறார்கள். அதேபோல் ஓப்பனிங் இறங்க வாய்ப்புள்ள வீரர் என்று கருதப்பட்ட டு பிளசிஸ் முதல் இரண்டு வாரம் சிஎஸ்கே அணிக்கு ஆட மாட்டார்.

தோனி திட்டம்
தென்னாப்பிரிக்கா பாகிஸ்தான் இடையே நடக்கும் கிரிக்கெட் தொடரால் டு பிளசிஸ் சிஎஸ்கே அணியில் தொடக்கத்தில் ஆட வாய்ப்பு இல்லை. இதனால் சிஎஸ்கே அணியில் ராபின் உத்தப்பா ஓப்பனிங் இறங்க வாய்ப்புள்ளது. இதுதான் சிஎஸ்கே அணிக்கு சிக்கலாகி உள்ளது.

வெளிநாட்டு வீரர்கள்
அதன்படி சிஎஸ்கே அணியில் ராபின் உத்தப்பா, ரூத்துராஜ். ரெய்னா, அம்பதி ராயுடு, தோனி, ஜடேஜா என்று வரிசையாக இந்திய வீரர்கள் களமிறங்க உள்ளனர். அதன்பின்பே சாம் கரன், பிராவோ ஆகியோர் களமிறங்க வாய்ப்புள்ளது. இதனால் தொடக்கத்தில் சிஎஸ்கே அணியில் வெளிநாட்டு வீரர்களே கிடையாது.

ஓப்பனர்
சிஎஸ்கே இந்த ஏலத்தில் வெளிநாட்டு ஓப்பனரை குறி வைத்தால் இந்த பிரச்சனை இருக்காது. ஆனால் சிஎஸ்கே வெளிநாட்டு ஆள் ரவுண்டரைத்தான் குறி வைக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் சிஎஸ்கே அணியில் டாப் ஆர்டரில் வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் பெரிய கேப் விழும் நிலை ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications