போயும், போயும் இவரையா ஏலம் எடுக்க போறீங்க?.. அட போங்கய்யா.. சிஎஸ்கேவின் திட்டம்.. ஷாக்கிங்!
சென்னை: 2021 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே எடுக்க போக்கும் முக்கிய வீரர் ஒருவரின் விவரம் கசிந்துள்ளது. ஏற்கனவே நொந்து போய் இருக்கும் சிஎஸ்கே ரசிகர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சி அளித்துள்ளது.
2021 ஐபிஎல் தொடருக்காக 8 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. ஏற்கனவே ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக ரிலீஸ் செய்யப்பட வேண்டிய வீரர்களை எல்லா அணிகளும் ரிலீஸ் செய்துவிட்டது.
சிஎஸ்கே அணியில் இருந்தும் கேதார் ஜாதவ், முரளி விஜய், பியூஸ் சாவ்லா, ஹர்பஜன் சிங், மோனு சிங் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இது போக வாட்சன் ஓய்வு பெற்றுள்ளார்.

சிஎஸ்கே அணி
சிஎஸ்கே அணியில் இளம் வீரர்கள் இந்த சீசனில் ஏலம் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் சிஎஸ்கே அணியோ ராபின் உத்தப்பா போன்ற வீரர்களை ஏலம் எடுத்தது. இதனால் பிப்ரவரி மாதம் நடக்க உள்ள ஏலத்தில் சிஎஸ்கே அணி யாரை ஏலம் எடுக்கும் என்று கேள்வி எழுந்தது.

மோசம்
இந்த முறையும் வயதான வீரர்களை சிஎஸ்கே அணி ஏலம் எடுக்க போகிறதோ என்று சந்தேகம் நிலவியது. அதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது முக்கியமான தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதன்படி சிஎஸ்கே அணி மேக்ஸ்வெல்லை ஏலம் எடுக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

ஏலம்
பஞ்சாப் அணியால் இவர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிஎஸ்கேவில் இருக்கும் ஒரு வெளிநாட்டு வீரரின் இடத்தை நிரப்புவதற்காக மேக்ஸ்வெல்லை சிஎஸ்கே அணி ஏலம் எடுக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். மேக்ஸ்வெல்லை சிஎஸ்கே அணி இன்ஸ்டராகிமில் பின் தொடர்வது இந்த சந்தேகத்தை மேலும் அதிகம் ஆகியுள்ளது.

கோபம்
கடந்த ஐபிஎல் சீசன் முழுக்க மேக்ஸ்வெல் மிக மோசமாக ஆடினார். பஞ்சாப் அணிக்காக ஆடிய இவர் ஒரு சிக்ஸ் கூட அடிக்கவில்லை.அதே சமயம் பிபிஎல் தொடரிலும், இந்தியாவிற்கு எதிரான டி 20 தொடரிலும் இவர் சிறப்பாக ஆடினார். இதனால் வரும் ஐபில் சீசனில் இவர் நன்றாக ஆடுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications